வேலூர் சிறையில் டிஎஸ்பி ஜாபர் சித்திக்! மனைவி அளித்த பாலியல் புகார்… சிபிசிஐடி அதிரடி கைது
செய்தி: ம.பா. கெஜராஜ்,
வேலூர்: மனைவி அளித்த வன்கொடுமைப் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி ஜாபர் சித்திக்கை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
காவல்துறை அதிகாரி மீதான இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாபர் சித்திக்கின் காதல் மனைவி ஷோபனா, தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாகவும் காவல்துறை தலைமை இயக்குநரிடம் 4.8.2026 அன்று (டிஜிபியிடம்), புகார் அளித்தார்
.இதனைத் தொடர்ந்துவேலுார் குற்ற பிரிவு குற்ற புலனாய்வுதுறை குற்ற எண் 02/2026 யு/எஸ் 85,115(2) 351(2) , ஆர்/ட்பள்யூ 3 (1),(ஆர்), 3(1) (s) 3(2) வி.எ) எஸ்/சி,எஸ்,டி வழக்கு செய்யப்பட்டதின் அடிப்படையில் 21.08.26 தேதி வேலூர் சி.பி.சி.ஐடி போலீசார் பரமக்குடி டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி இடம் விசாரணை செய்தும் அலுவலகத்தை சோதனை செய்தனர்பின்னர்.
பின்னர் ஜாபர் சித்திக் தமிழக உள்துறை செயலாளரால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இரவு வேலூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வர வழைக்கப்பட்ட ஜாபர் சித்திக்கிடம் இரவு முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுபின்னர் ஜாபர் சித்திக் கைது செய்யப்பட்டு வேலூர் தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

அரக்கோணத்தில் வெடித்த சர்ச்சை!
ஜாபர் சித்திக் அரக்கோணத்தில் டிஎஸ்பியாகப் பணியாற்றியபோதே அவரைச் சுற்றி அரசியல் சர்ச்சைகள் வெடித்தன.
அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சு.ரவி, பொதுமேடையில் ஜாபர் சித்திக்கைக் கடுமையாக விமர்சித்தார்.
அவரை திமுகவின் கைக்கூலி என்றும், பாலியல் விவகாரங்களில் ஈடுபாடு கொண்டவர் என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினார்.
மணல் எடுப்பது தொடர்பான பிரச்சனை இது என்று அப்போது அதிகாரிகள் தரப்பில் சொன்னதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால், அப்போது எழுந்த விமர்சனங்களின் பின்னணியில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
தற்போது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு ஜாபர் சித்திக்கைக் கைது செய்திருப்பது, பழைய சர்ச்சைகளையும் மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.
அதிகாரத்தில் இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது!
காவல்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுமக்களுக்குச் சட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியவர்கள். அத்தகைய அதிகாரிகள் மீது புகார்கள் எழும்போது, அவற்றை அலட்சியப்படுத்தாமல் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதே அரசின் கடமை.
அரக்கோணத்தில் பணியாற்றிய காலத்திலேயே அரசியல் மேடையில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட டிஎஸ்பி, தற்போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரமும் பதவியும் ஒருவரைச் சட்டத்திற்கு மேலானவராக மாற்றிவிட முடியாது என்பதையே இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
வழக்கின் இறுதி முடிவு நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில் அமையும்.

admin
