“கேள்வி கேட்ட கனிமொழிக்கே திருப்பிக் கொடுத்த செங்கோட்டையன்!”
செய்தி: ம.பா. கெஜராஜ்,
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பெண்கள் குறித்து திமுக தலைவர்கள் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
கனிமொழியின் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், நாட்டில் நிலவும் மாசுபாடு குறித்து யார் ஆட்சிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகளை மட்டுமே அடிப்படையாக வைத்து சட்டம்-ஒழுங்கு குறித்து குற்றம் சாட்டக் கூடாது.
அதுஎளிது. ஆனால், நடைமுறையில் பிரச்சினைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் எண்ணம்.
அதற்காகவே ‘சிங்கப்பெண் படை’ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது, “பெண்களைப் பற்றி கொச்சையாகப் பேசியது குறித்து ஸ்டாலினிடமும், உதயநிதியிடமும் கேட்டீர்களா?
உங்கள் அண்ணனும், அண்ணன் மகனும் பெண்களைப் பற்றி மேடையில் அவதூறாக பேசியதை கனிமொழியிடம் கேளுங்கள்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதன் மூலம் பெண்கள் தொடர்பான பேச்சு விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
