தீபாவளிக்கு சென்னையில் இருந்து செல்லும் பஸ்கள் இங்கிருந்து தான் புறப்படுகிறது!

தீபாவளிக்கு சென்னையில் இருந்து செல்லும் பஸ்கள் இங்கிருந்து தான் புறப்படுகிறது!

செய்தி: ம.பா. கெஜராஜ்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் நெரிசலைத் தவிர்க்க, வழித்தடங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகள் புறப்படும் இடங்கள்:

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்: திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள்..

கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம்: வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கப் பேருந்துகள்.

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்: கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்: வேலூர், காஞ்சிபுரம், பெங்களூரு, திருத்தணி மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழித்தடங்கள்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வழித்தடங்கள்.

பயணிகள் தங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்து எந்த நிலையத்திலிருந்து புறப்படுகிறது என்பதை முன்கூட்டியே உறுதிசெய்து, அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பண்டிகைக் கால நெரிசலைக் கருத்தில் கொண்டு, பேருந்து நிலையங்களுக்கு போதிய நேரத்திற்கு முன்பாகச் செல்வதும் பயனுள்ளதாக இருக்கும்.