சிறை கசப்பான அனுபவத்தை தராதாம்!

சிறை கசப்பான அனுபவத்தை தராதாம்!

கு.அசோக்,

 சிறை கைதிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் ஒளி விளக்காகவும் வழிகாட்டியாகவும் சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும் - சிறை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி துவக்க விழாவில் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் பேச்சு.

 வேலூர்மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தில் இன்று சிறைத்துறை அதிகாரிகளுக்கான தனித்திறன் மேம்பாடு மற்றும் சிறை கைதிகள் கையாளும் கற்றல் குறித்து மூன்று நாட்கள் பயிற்சி 30 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

 இதன் துவக்க விழாவானது சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் நடைபெற்றது குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தனர், இவ்விழாவில் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இணை இயக்குநர் டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

 இப்பயிற்சியில் பல்வேறு தொழில்கள் குறித்தும் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கபடவுள்ளது.

  இவ்விழாவில் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் பேசுகையில் சிறை கைதிகள் என்பவர் உங்களின் கீழ் சிறையில் உள்ளனர் நீங்கள் அவர்களுக்கு நல்ல நிலைக்கு மாற்றும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

   சிறை அனுபவம் என்பதும் சிறை வாசிகளுக்கு கசப்பான அனுபவத்தை தராது. அது அவர்களுக்கு சுமாரான நிலைக்கு மாற்றும் மேலும் சிறையிலிருந்து விடுதலையாபவர்கள் நல்ல நிலைக்கு மாற அவர்களின் சிறை அனுபவங்கள் காரணமாக அமைகிறது.

   அதனால் அவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாதத்தை துவங்குகின்றனர் நாம் சிறை அதிகாரிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கின்றோம் இதன் மூலம் குற்றங்களும் குறையும் சிறைவாசிகளும் எண்ணிக்கை குறைந்துவிடும் இதனை சிறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்  என பேசினார்.