தூய்மை பணியாளர்களுடன் திருப்பத்தூர் இராணிப்பேட்டை ஆட்சியர்கள்!
கு.அசோக்,
திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தார் முதல்வருக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 291 பேருக்கான காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல், இட்லி, வடை, கேசரி, ரவா கிச்சடி, சாம்பார் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உண்பதன் மூலம் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா, நகராட்சி ஆணையாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியின் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான உணவகம் திட்ட நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சீனிவாசன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலையில்,வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நாராயணன் அவர்கள் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி இத்திட்டத்தினை பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தார்.
தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்கள்.
நகராட்சி பொறியாளர் கணேசன் ,சுகாதார ஆய்வாளர் தேவி பாலா, மற்றும் தூய்மை பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

admin
