விஜய் குறிவைக்கப்பட்டதினால் அவசரமாக சென்னை அனுப்பிவைக்கப்பட்டார்!

விஜய் குறிவைக்கப்பட்டதினால் அவசரமாக சென்னை அனுப்பிவைக்கப்பட்டார்!

 ம.பா.கெஜராஜ்,

 அன்றைக்கு ஏன் ஓடினார் விஜய் என்று எம்.பி.கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் விமர்சனம் செய்துள்ள நிலையில்,  விஜய் குறிவைக்கப்பட்டார் என்பதினால் அவசரமாக அவசரமாக அவர் சென்னை அனுப்பிவைக்கப்பட்டார் என்று மூத்த பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். 

 கடந்த ஆண்டு விஜய்யின் கருர் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரில் துயரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அப்போது விஜயை அவரது பாதுகாவலர்கள் புடை சூழ்ந்து பத்திரமாக விமான நிலையத்துக்கு அழைத்து வந்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

  இது மட்டும் உரிய நேரத்தில் நடந்திருக்காவிட்டால், விஜய்க்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.

 இப்படித்தான் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் தெரிவிக்கிறார்கள். விஜயை குறிவைத்து சில ஏவல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் பார்வைக்கு கண்டிப்பாக பட்டிருக்கும்.

 இதனால் மட்டுமே அவர் அவசர கதியில் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டார்.

  அன்று தவெக தலைவராக கரூர் வந்தவர், இன்று சிஎம்மாக பலத்த பாதுகாப்புடன் கரூர் வந்து சென்றுள்ளார்.

   ஆனால் திமுக எம்.பி.கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கரூரில் இருந்து விஜய் ஓடியது ஏன் என்று விமர்சித்து வருகிறார்கள். இது அர்த்தமற்றது மட்டுமின்றி அவர்களது ஏமாற்றத்தையுமே காட்டுகிறாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.