சிறை அதிகாரிகளே உஷார்!

சிறை அதிகாரிகளே உஷார்!

சிறை அதிகாரிகளே உஷார்!

கு.அசோக்,

 சிறை அதிகாரிகள் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் செல்போன் போதை பொருட்களை கொண்டு செல்ல துணை போய் வேலையை இழக்காதீர்கள்  -சிறைத்துறை தலைவர் சங்கர்  சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேச்சு

  வேலூர்மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தில் இன்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு விழாவானதும் பட்டமளிப்பு விழாவும் நடந்தது.

   இதனை தமிழகத்தின் சிறைத்துறை மற்றும் சீர் திருத்த நிர்வாக துறையின் டிஜிபி சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு  பட்டங்களை வழங்கினார்.

   இதில் கர்நாடக,தமிழ்நாடு,நாகாலாந்து,மத்திய பிரதேசம்,கேரளா,டெல்லி ஆந்திரா ஆகிய மாநில சிறை அதிகாரிகளுக்கு பட்டங்களும் சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

  3 மாத பயிற்சி மற்றும் 9 மாதங்கள் பயிற்சியை அதிகாரிகள் நிறைவு செய்தனர் இந்த விழாவில்   சிறை சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப்,பேராசிரியர் ப்யூலா,இணை இயக்குநர் கோவிந்தராஜன் உள்ளிட்டோரும் மற்றும் சிறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்

   இவ்விழாவில் தமிழகத்தின் சிறைத்துறை மற்றும் சீர் திருத்த நிர்வாக துறையின் டிஜிபி சங்கர் பேசுகையில், நாம் ஆங்கிலேயர் கால சிறை சட்டங்களை சீர் திருத்தம் செய்துள்ளோம்.

   சீர் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் நம்முடைய மனநிலையை மாற்ற வேண்டும் அதனை மாற்றுவது முக்கியம் நாம் நிச்சயம் அதனை மாற்றுவோம் அடக்குமுறை மனப்பான்மை மாறி சிறையில் சீர் திருத்தம் செய்வோம்.

  ஒரு சிறை வாசி திருந்தி நல்ல வாழ்க்கை முறைக்கு போனால் அது சிறை நிர்வாகத்தின் வெற்றி.

  மாறாக அதே சிறைவாசி கடுமையான குற்றவாளியாக வந்தால் அது சிறை நிர்வாகத்தின் தோல்வி.

 சிறை அதிகாரிகள் எதற்காக பணி நீக்கம் செய்யபடுகின்றனர் உயரதிகாரிகள் பிடிக்காததால் அல்ல, அவர்கள் மீது கம்பீரமான குற்றச்சாட்டுகள் உள்ளது.

 அதற்¢கு அந்த அதிகாரியே தான் காரணம்.

 இது நம் பணிக்காலம் முழுவதும் நமது காதில் ஒலித்துகொண்டிருக்க வேண்டும் என்ன குற்றச்சாட்டு அதிகாரிகள் மீது என்றால் கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை உள்ளே அனுமதித்தார்.

  சிறை கைதிகளுக்கு வசதி செய்து தர பணம் வாங்கினார் இது எல்லாம் பொதுவான குற்றச்சாட்டுகள்.

   இதற்கெல்லாம் அந்த அதிகாரி தான் காரணம் ஆனால் எனக்கு குடும்பம் இருக்கிறது குழந்தையில்லை எப்படியாவது மீண்டும் பணியில் சேருங்கள் என கெஞ்சுகிறார்கள்.

  அவர்கள் எல்லாம் இங்கு பயிற்சியை முடித்து வந்தவர்களாக இருப்பார்கள், ஆகவே நீங்கள் கவணம் செலுத்த வேண்டும்.

    அரசின் நல்ல விதிகள் சட்டங்கள் இருக்கிறது ஆனால் பிரச்சணை எப்படி வருகிறது என்றால் அந்த விதிகள் சட்டங்கள் மீறி நீங்கள் அதிகாரிகள் செயல்பட கூடாது.

    தொழில் விதிகளை பின்பற்ற வேண்டும் வேலைக்கு நேர் எதிரான விஷயத்தை செய்ய கூடாது.

  சிறையினுள் போதை பொருட்களோ தடை செய்யப்பட்ட பொருட்களோ செல்போனையோ கொண்டு செல்ல அனுமதிப்பதை அதிகாரிகள் நீங்கள் செய்ய கூடாது என பேசினார்.