வேலூர் கலெக்டர் யார்? லீலா அலெக்ஸா? அல்லது வே.இரா.சுப்பு லெட்சுமியா?
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமதி லீலா அலெக்ஸாண்டர் இ.ஆ.ப.அவர்கள் பொறுப்பேற்று சிறப்பான முறையில் அட்மினிஸ்ட்ரேஷன் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு முன்னர் வேலூர் கலெக்டராக இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட வே.இரா.சுப்புலெட்மியை வேலூர் ஆட்சியர் என்று குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
அதில் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்கள் கடிதத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர இருப்பு கிடங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மாதாந்திர தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை 2026 ஆம் ஆண்டு ஜூலை மாத மாதாந்திர தணிக்கை மேற்கொள்ள இருப்பதால்

எதிர்வரும் 08.07.2026 அன்று காலை 9 மணிக்கு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவா அவர்களால் தணிக்கை செய்யப்படவுள்ளது.
எனவே மேற்படி நிகழ்வில் தாங்களும் தங்கள் கட்சி சார்ந்த பிரமுகர் கலந்து கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மாவட்ட தேர்தல் அலுவலருக்காக மற்றும் மாவட்ட ஆட்சியருக்காக வேலூர் மாவட்டம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த கடிதத்தை திருமதி.வே.இரா.சுப்புலெட்சுமி இ.ஆ.ப. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அனுப்பிவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
வே.இரா.சுப்புலெட்சுமி அவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு மாதங்கள் கடந்துவிட்டது, புதிய ஆட்சியரும் பொறுபேற்றிருக்கும் நிலையில்,இந்த குழப்பமான கடித்தத்தை அனுப்பிவைத்து சம்மந்தப்பட்ட அதிகாரி அவரது சூப்பர் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

admin
