ஆடு திருடிய வழக்கில் குற்றஞ்சாட்பட்ட வழக்கறிஞருக்கு பதவியா?

ஆடு திருடிய வழக்கில் குற்றஞ்சாட்பட்ட வழக்கறிஞருக்கு பதவியா?

ஆர்.ரமேஷ்,

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஞ்சலா கணவனை இழந்து, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

  இந்நிலையில்,  அஞ்சலா  கடந்த 17.09.2025 அன்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், தான் வளர்த்து வந்த ஆடு காணவில்லையென புகார் அளித்த நிலையில்இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

  அப்போது அம்பலால் நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வேறு நபர் ஒருவருடன் சேர்ந்து, காரில் அஞ்சலாவின் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

   இதுதொடர்பாக வழக்கறிஞர் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். அப்படியிருக்க  நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில்சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடுவதற்காக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 மே....மே....ன்னு தான் கத்த தோணுதுங்க.