கரூர் செல்லும் சி.எம். ஜோசப் விஜய்!

கரூர் செல்லும் சி.எம். ஜோசப் விஜய்!

ச.சரவணன்,

 கடந்த 2025 செப்டம்பரில் கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், நடந்த, தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். அவர்கள் குடும்பத்திற்கு, த.வெ.க., சார்பில், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அழைத்து, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து த.வெ.க., தலைவர் என்ற முறையில், விஜய் ஆறுதல் கூறினார். தேர்தலுக்கு பின் நேரில் வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக, விஜய் உறுதியளித்திருந்தார்.

 அப்படியிருக்க கரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். த.வெ.க.,வில் அவர் இணைய உள்ளார்.

 விரைவில் கரூர் சட்டசபை தொகுதி உட்பட ஏழு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், முதல்வர் விஜய், வரும் 10 மற்றும் 11ம் தேதி, கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு நடக்கும் அரசு விழாவில் பங் கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

   அத்துடன், கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் புகைப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தவும், முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.