ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
ம.பா.கெஜராஜ்,
இரண்டே மாதத்தில் மாறுதல் பெற்ற பால நகதேவிசைபர் க்ரைம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சில ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலர் கே.மணிவாசன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உளவுப் பிரிவு டிஜிபியாக உள்ள பால நாகதேவி தற்போது சைபர் க்ரைம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் குற்றப் பிரிவு டிஜிபியாக இருந்த பால நாகதேவி, கடந்த மார்ச் மாதம் உளவுப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். உள்துறைச் செயலராக இருந்த தீரஜ்குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இரண்டு மாதங்களில் பால நாகதேவியின் பொறுப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முதல்வர் விஜய்யின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக ஜி.தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு வேலூர் சரக டிஐஜியாக பணியாற்றினார். தென் சென்னை இணை ஆணையராக இருந்த பி.சி.கல்யாண் இப்போது சென்னை உளவுப் பிரிவு (இன்டர்னல் செக்யூரிட்டி) டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த பி.சரவணன் இப்போது சென்னை சிஐடி உளவுத் துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.கே.உத்தவ்ராவ் இப்போது சென்னை குற்றப் பிரிவு உளவுத் துறையின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் மயில்வாகணன் இப்போது சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாறுதல் பெற்றுள்ளனர்.

admin
