வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் – 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
செய்தி: ஜி. குலசேகரன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வழக்காடிகள் நீதிமன்றப் பணிகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், வாணியம்பாடியிலேயே கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

admin
