அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!  முதல்வர் விஜய் சூப்பர் உத்தரவு!

அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!  முதல்வர் விஜய் சூப்பர் உத்தரவு!

செய்தி:ம.பா.கெஜராஜ்,

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது உச்சவரம்பை தற்போதைய விதிமுறைகளைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதும் தேர்வர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   இந்த வயது வரம்பு உயர்வு பொதுப் பிரிவினருக்கு மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவையர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்ட வயது சலுகைகளுடன் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   மேலும், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இந்த வயது வரம்பு உயர்வு பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

   அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் முறையாக நடத்தப்படாததால், வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு, அரசுப் பணிக்காகத் தொடர்ந்து முயற்சி செய்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.