மருத்துவ சிகிச்சை வணிக ரீதியானாது அல்ல!  நிறுவனர் தின நிகழ்ச்சியில் நறுவீ ஜி.வி.சம்பத் பேச்சு!

மருத்துவ சிகிச்சை வணிக ரீதியானாது அல்ல!  நிறுவனர் தின நிகழ்ச்சியில் நறுவீ ஜி.வி.சம்பத் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

  மருத்துவ சிகிச்சை என்பது வணிக ரீதியானாது அல்ல என்று நிறுவனர் தின நிகழ்ச்சியில் நறுவீ  ஜி.வி.சம்பத் பேசினார்.

  வேலூர் நறுவீ மருத்துவமனையில் நிறுவனர் தின விழா நடைபெற்றது.

 இந்த விழாவை யொட்டி ஏழை பள்ளி மாணவர்களின் மேல் படிப்புக்கு கல்வி உதவித் தொகை, முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவையொட்டி மருத்துவமனை ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு கலாச்சார போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

          வேலூர் நறுவீ மருத்துவமனையில் நிறுவனர் தின நிறைவு விழா நேற்று மாலை (20-12-2025) மருத்துவமனை வளாகத்தில் வண்ணமயமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்களுக்கு மதிய உணவு மற்றும் ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

          இந்நிகழ்வையொட்டி நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும், நாட்டில் பசுமையை பற்றிய விழிப்புணர்வு, உலக சமத்துவம், மதங்களுக்கு இடையே சகோதரத்துவம், போதை  ஒழிப்பு, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

   நிகழ்ச்சியில் பரதநாட்டியம், தனிநபர் மற்றும் குழு நடனங்கள், பாட்டுக்கு பாட்டு, ஆடல் பாடல், பேஷன் ஷோ ரங்கோலி, முக ஓவியம், காய் கறிகளை கொண்டு பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

          நிகழ்வை யொட்டி நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய நிறுவனத் தலைவர் ஜி.வி.சம்பத் பேசுகையில் கூறியதாவது:

          நிறுவனர் தின விழா என்பது நறுவீ குடும்ப விழாவாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இம்மருத்துவமனை உங்களின் சேவை மற்றும் அற்பணிப்பு காரணமாக படிப்படியாக இம் மருத்துவமனை உயர்ந்து வருகிறது. இம் மருத்துவமனையில் அரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் கிரிட்டிகளான அறுவை சிகிச்சைகள் நவீன முறையில் சிறப்பாக செய்வதின் மூலம் நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையை பாராட்டி வருகின்றனர்.

  இங்கு மருத்துவ சிகிச்சை என்பது வணிக ரீதியானாது அல்ல, உன்னதமான அற்பணிப்புடன் நோயாளிகளை காப்பாற்றும் பணி இங்கு நடைபெற்று வருகிறது.

          இம்மருத்துவமனையில் செய்து வரும் மருத்துவ சேவைகள் பற்றி சமூக ஊடகம் மற்றும் வளைதலங்களில் சிறப்பான முறையில் பதிவிட்டு வருவதை சுட்டிக்காட்டுகிறேன்.

   மேலும், நமது மருத்துவ சேவைகள் பற்றி அனைவரும் அறிந்திடும் வகையில் நாம் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டும். இன்றை கால கட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. மது மற்றும் போதைக்கு அடிமையாகி வரும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மருத்துவ பணியாளர்கள் இளைஞர்களுக்கு மது மற்றும் போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துரைத்து நல்வழிபடுத்த வேண்டும் என்றார்.

          இந்த கலை விழாவில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் திலீப் மத்தாய், பொது மருத்துவ நிபுணர் டாக்டர் குணசேகரன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சரவணன் அங்கிசெட்டி, தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

          முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை மனித வள பொது மேலாளர் லலிதா வரவேற்றார். முடிவில் தலைமை செவிலியர் அலுவலர் மேரி மர்ஜெரி நன்றி தெரிவித்தார்.