திருப்பத்தூர் கிரைம்!

திருப்பத்தூர் கிரைம்!

ஜி.குலசேகரன்,

   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியிலிருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

   தகவலின் பெயரில்  போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது  அதிகாலை பெரிய மூக்கனூர் வழியாக வந்தடெம்போ வேனை சந்தேகத்தின் பேரில்  நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில் 4 டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக திருப்பத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சதாசிவம்(40). என்பவரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை திருப்பத்தூ¢ வழங்கல் துறையிடம் ஒப்படைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் 8.5 கிலோ அடங்கிய 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

 

ஆபரேஷன் நார்கோஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜோலார்பேட்டை இரயில்வே பாதுகாப்புப் படையினர் இரயில்களில் போதைப்பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சட்டவிரோதமாகக் கடத்துவதற்கு எதிராக ஒரு சிறப்புச் சோதனையை நடத்தினர்.

அப்போது ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தடைந்த டாடா - ஈஆர்எஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது கேட்பாரற்றுக் கிடந்த பேகை சோதனை செய்ததில் 8.5 கிலோ அளவிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும் இதன் மதிப்பு 4, லட்சத்து 50 ஆயிரம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா வை இரயில்வே பாதுகாப்புப் படை நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

  அதே போல் சென்னையிலிருந்து ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது ஆம்பூர் குடியாத்தம் இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில் பெட்டியில் 21 கிலோ கஞ்சா பைகளில் அடைக்கப்பட்டு ரயில் பெட்டி இருக்கைகள் கீழே வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

 பின்னர் இதில் தொடர்ந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதனையெடுத்து ரயில்வே போலீசார் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.