ஊழல் பணத்தில் கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்திருக்கும் திமுக! வேலூரில் கொதித்த விஜய்! பிரஸ்ஸை உதாசீனபப்டுத்திய நிர்வாகிகள்!
ஜி.குலசேகரன்,
திமுக ஊழல் செய்த பணத்தை கொடுத்து கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்துள்ளது அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும் கூட்டணியில் திமுக சேர்த்துகொள்கிறது - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கிராமங்களுக்கும் வந்து மக்களை நேரடியாக சந்திப்பேன் - அரசியல் வாதிகள் தாங்கள் சம்பாதித்த பணம் எப்படி வந்தது என வெளியிட தைரியம் உள்ளதாக அகரம்சேரியில் தவெக கூட்டத்தில் - தவெக தலைவர் விஜய் பேச்சு.
வேலூர்மாவட்டம், பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் விஜய் பேசுகையில் அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் உடனே திமுக கூட்டணியில் சேர்த்து கொள்கிறது. ஊழல் செய்த பணத்தை கொடுத்து கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்துள்ளனர்.
வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எல்லா கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பேன். மாபெரும் மக்கள் இயக்கமாக தமிழக வெற்றி கழகம் உள்ளது.
வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல் இது, உங்களுடன் நான் உள்ளேன் மக்கள் உள்ளார்கள் நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.
தீய சக்தி ஊழல் சக்தி என யாரை சொல்கிறோம் என மக்களுக்கு தெரியும் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.
அரசியல்வாதிகளை கேட்கிறேன் எவ்வளவு காசு வைத்துள்ளீர்கள் இதையெல்லாம் ஆட்டையை போட்ட காசா என வெளிப்படையாக சொல்ல முடியுமா? இதை எல்லாம் கேட்டால் எங்கள் மீது சேற்றை வாரிவிசுவார்கள்.
எனக்கு புதிய நண்பர் கிடைத்துள்ளார் அது முதல்வர் தான் நாங்கள் உங்களுக்கு நண்பர்கள் என நீங்கள் சொன்னால் கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழையை தூக்கி போட்டீர்கள்.
மன்சாட்சி இல்லையா? அதனை நீங்கள் அறியாமல் பேசுவிட்டீர்களா உண்மை என்ன என்பதை ஒத்துகொள்ளதான் வேண்டும்.
மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடு செய்யபடும் என சொன்னீர்கள், செய்தீர்களா? நிறைய கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது முதல்வரிடம் ஒரு தங்கை கேள்விகேட்டார் எங்கள் ஊருக்கு ஒரு மினி பஸ் விடுங்கள் என, மலை கிராமங்களுக்கு பஸ் வசதியில்லை மருத்துவமனை வசதியில்லை வீட்டிலேயே இதனால் பிரசவம் பார்க்கும் ஆபத்து உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெண்களே சொல்கின்றனர்
ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிகிடப்பதாக கூறிவருகின்றனர் கேட்பவர்கள் என்ன கேசரியா சாப்பிடுகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு காணாமல் போய்விட்டது முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்து நான் பேசுவதாக சங்கடப்பட்டாராம்.
நான் எப்படி அமைதியாக இருக்க முடியும் நானும் கேள்வி கேட்கிறோம் பதில் சொல்லவில்லை ஐந்து வருடமாக.
ஆனால் பதில் சொல்லியே ஆகவே வேண்டும் தீய சக்திக்கு என்டுகார்டு போட வேண்டுமென்றால் அவர்களை சுவிட் ஆப் செய்ய வேண்டும்.
வாக்குபதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்தை நீங்கள் அழுத்த வேண்டும் விசிலுக்கு வாக்களியுங்கள் உறுதியாக சத்தியமாக சொல்கிறேன் நமது ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.

அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் முதல் தரத்தில் இருக்கும் போட்டி தேர்வுகளுக்கு கோச்சிங்க் செண்டர் செல்ல வேண்டியதில்லை.
அரசு கல்லூரிகளின் தரம் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் அமைக்கப்படும் மாநில ஒன்றிய அரசு அலுவலகங்களை அனுகும் முறை குறித்து செயல்முறை பாடம் கற்பிக்கபடும்.
ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள் சேர்க்கை குறித்து புரிதல் தெளிவு உருவாக்கபடும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட கழிவறைகள் அமைக்கபடும்.
போதை பொருட்கள் இல்லா தமிழகம் உருவாக்கபடும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் சரிபாதி பெண்களாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கபடும்.
மலை கிராமங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வகையில் அமைக்கபடும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆட்டோ டேக்சி லாரி ஓட்டுநர்கள் நலனுக்காக நலவாரியம் அமைக்கபடும்.
தமிழகத்தில் தேவையான பகுதிகளில் தொழிற்சாலை அமைக்க கவனம் செலுத்தப்படும் விவசாயிகள் மீனவர்கள் நெசவாளர்களுக்கான திட்டங்கள் உருவாக்கபடும் என பேசினார் இகூட்டத்தில் திரளான தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிவுற்று நிலையில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் நினைவு பரிசுகளை வழங்கினர். அப்போது ஒரு நிர்வாகி விஜயிடம் பரிசு கொடுக்க முற்பட்ட போது அவரை தடுக்க முயன்றால் மா.செ.வேல்முருகன்.
பத்திரிகையாளர்களை உதாசினப்படுத்திய மா.நிர்வாகிகள்!
அதே போல் பிரஸ்ஸுக்கு என்ன ப்ரோகிராம் எபதை தெரிவிக்க அகட்சிகாரர்கள் எவரும் முன்வரவில்லை. செய்தியாளர்கள் பலர் அழைத்தும் மாவட்ட அளவிளான நிர்வாகிகள் கூட போன்காலை அட்டென்ட் செய்யவில்லையாம்.
திமுகவை திட்டினால் பொங்கியெழும் அதிமுக!
விஜய் பேப்பர் பார்த்து படித்துதான் ரியாக்ட் செய்கிறார்" என்று ஒரு பொய்யான கட்டுக்கதையை சமூக வலைதளங்கள் வழியாக அதிமுக ஐடி விங் அவிழ்த்துவிட்டு, அதன் நிர்வாகிகள் குறுக்க மறுக்க ஓடுகிறார்கள். திமுக-வைத் தாக்கி விஜய் பேசினால், அதிமுக ஐடி விங்கிற்கு கோபம் வந்துவிடுகிறது.?? எடப்பாடியாரே கொஞ்சம் கவனியுங்க...

admin
