இன்ஸ்பெக்டரின் ஆபாச பேச்சால் தற்கொலை செய்து கொண்ட அப்பாவி இளைஞர்! நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஏழைத்தாய்!

ம.பா.கெஜராஜ்,

 என் மகனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கேத்ரின் மேரியின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க கோரியும், திருத்தம் செய்த முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்ட ஆறு நபர்களை கைது செய்வதுடன், கைபற்றிய என் மகன் செல் போனில் உள்ள முழு பதிவையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரியும் ஒரு ஏழை இஸ்லாமிய தாய் வேலூர் சரக டிஐஜியிடம் புகார் அளித்துவிட்டு நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

     அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது நான் மேற்கண்ட முகவரியில் என் குடும்பத்துடன் வசிக்கிறேன். என் கணவர் முபாரக் அலி பீடி சுற்றும் தொழில் செய்கிறார். எனக்கு மூன்று மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். நாங்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கிறோம். என் மூத்த மகன் எம்.மதார் வயது-32, தோல் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.

  மதாருக்கு இரண்டு திருமணம் ஆகி உள்ளது. முதல் மனைவி பரிதா இரண்டாவது மனைவி சபரீன் ஆவார். முதல் மனைவிக்கு மூன்று மகன் ஒரு மகள் உள்ளனர். என் மகனுக்கும் அவர் மனைவி பரிதாவுக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு, கடந்த மூன்று மாதமாக பரிதா கோபித்துக் கொண்டு அவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

 என் மகன் மதார் மற்றும் அவர் மனைவி இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்த நிலையில், பரிதா, மதார் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கொடுத்திருப்பதாக போலீசார் சொன்னார்கள்.   

 18.05.2026 ஆம் தேதி அன்று போலீசார் என்னையும், மதார், என் மகள் ரேஷ்மா, மகன் தப்ரேஸ் ஆகியோரை விசாரணைக்காக வரச் சொனதன் பேரில் பிற்பகல் சுமார்3.30. மணிக்கு குடியாத்தம் காவல் நிலையத்துக்கு நாங்கள் சென்றோம். இரண்டரை மணி நேரம் கழித்து மாலை ஆறு மணிக்கு இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் எங்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது புகாதாரரான பரிதாவுடன் அவரது அம்மா ஹமிதா, உறவினர்கள் அமீது, அக்பர், இம்தியாஸ், தன்சீ, ரிஷ்வானா, அஸ்கர், அப்சஸ்ர், மற்றும் கட்டபஞ்சாயத்து செய்யும் நபர்கள் என பலரும் ஸ்டேஷனுக்குள் வந்தனர்.

   அப்போது என் மகன் மதாரை விசாரித்த இன்ஸ்பெக்டர், உன் பொண்டாடி பத்து பேர் இல்லை நூறு பேர்கிட்ட போவா, உனக்கென்னாடா வந்தது பொட்டை, மயிறுவெண்ணை, நாயே என்று திட்டினார். இன்ஸ்பெக்டரின் டேபிளில் மதார் கை வைத்த போது அடபோடா புடுங்கி உனக்கு முதுகெலும்பு இல்லையா என்று சத்தம் போட்டார். பரிதா போட்ட நகைகளை மரியாதையாக திருப்பி கொடு இல்லைன்னா ரிமாண்டு செய்துவிடுவேன் என்று ஐந்து சவரன் நகைகளை கேட்டு மிரட்டினார்.

   இதனால் என் மகனுக்கு மிகுந்த மன உலைச்சல் ஏற்பட்டது. பலர் முன்னிலையில் அந்த இன்ஸ்பெக்டர் என்னை திட்டி அவமானப்படுத்திவிட்டார் எனக்கு வாழவே பிடிக்கல்லை என்று மதார் ஸ்டேஷனில் இருந்து வெளியில் வந்தவுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

   அப்படியிருக்க 27.05.2026 ம் தேதி என் மகன் மதார் மட்டும் வீட்டில் இருந்தான். நாங்கள் என் மகளை பார்க்க அவர் வீட்டிற்கு சென்று இருந்தோம் என் மருமகன் அசேன் காலை 11.00 மணி அளவில் வீட்டிற்கு சென்று கதவை தட்டியும் திறக்கவில்லை என்பதால் அசேன் வீட்டின் கூரை மேல் ஏறி உள்ளே நுழைந்து பார்த்தபோது என் மகன் மதார் வீட்டின் கூரையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்துள்ளார்.

   பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் என் மகனின் உடலை இறக்கினர். பின்னர் தகவல் தெரிந்து இறந்த என் மகனை உடலை பார்த்து கதறினேன் அப்போது அவர் அருகில் இருந்த செல் போனை எடுத்து என் இளையமகன் பார்த்த போது அதில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அதற்கு அக்பர் பாஷா, அஸ்கர்பாஷா, தன்சீர் அகமது, இம்தியாஸ் அகமது, அகமது பாஷா, மற்றும் இம்ரான், மகளிர் என இவர்கள் தான் என் சாவுக்கு காரணம் என்று வீடியோ பதிவிட்டிருந்தார்.

   தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை வெறும் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து, மதார் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பேசி வீடியோ பதிவு செய்த செல் போனை (9042401918) கைபற்றி அதில் இருந்த பல வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் டெலிட் செய்துவிட்டனர். நல்ல தருணமாக நாங்கள் மேற்படி செல் போனில் இருந்த 7 வீடியோக்களை பல முறை ஷேர் செய்து எங்களுக்குள் வைத்துக் கொண்டோம். இதை அறிந்த பேர்னாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு எங்கள் தரப்பில் பலரது செல்போனில் இருந்த மதார் பேசியிருந்த விடியோக்களை கட்டாயப்படுத்தி அழித்துவிட்டர்.

   இருந்தபோதும் சிலரிடம் இருந்த ஆதார வீடியோக்களை அறிந்த பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் போராட்டங்களுக்குப் பின்னர் மேற்படி ஆறு பேர்களின் பெயர்களை மட்டும் தற்கொலைக்கு தூண்டுதல் தொடர்பான சட்டப்பிரிவுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், சம்பவத்தில் முக்கிய பங்காற்றிய அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கேத்ரின் மேரியை வழக்கில் சேர்க்கவில்லை.

   இது எங்களிடம் மிகுந்த சந்தேகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மகளிர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகளிரில் இப்படி என் மகனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதே மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கேத்ரின் மேரிதான். மேலும் இறந்த மதார் பேசியுள்ள ஏழு வீடியோக்களில் உள்ள வாக்குமூலத்தை முழுமையாக ஆய்வு செய்வதுடன், சம்பவத்தில் நேரடி தொடர்புடைய அனைத்து நபர்களின் பங்கையும் விசாரிக்க வேண்டும். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கேத்ரின் மேரியை குற்றவாளியாக வழக்கில் சேர்க்க வேண்டும்.

 ஏனெனில் அவர்தான் கட்டபஞ்சாயத்து குழுவினரை அருகில் அமர வைத்துக் கொண்டு புகாதார் மற்றும் அவரது உறவினர்களின் முன் என் மகனை அவமானகரமாக பேசினார். அதனாலேயே மதார் தற்கொலை செய்துகொண்டார். ஆகவே விசாரணையை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும், உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் மேலும் போலீசாரால் கைபற்றப்பட்ட என் மகன் மதாரின் செல் போனில் உள்ள பதிவுகளை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

 புகார் மனு டிஐஜி அலுவலகத்தில் பெறப்பட்ட போதிலும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அந்த ஏழைக் குடும்பம் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.

 இது குறித்து பேர்னாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபுவை தொடர்பு கொண்டு பேசினோம். சார் வீடியோவிலிருந்த பதிவுகளின் படி எப்.ஐ.ஆர். போடப்பட்டுவிட்டது. மகளிர் காவல் நிலையத்தைப் பற்றி வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆனால் யார் பெயரையும் குறிப்பிடாததால் வழக்கில் சேர்க்கவில்லை என்றார்.

 அடுத்தகாக குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேத்ரின் மேரியிடம் செல்போனில் பேசினோம். அவர் உரிய விவரங்களை சொல்லாமல் ஒரு லேடி ஆபிசரிடம் எப்படி நீங்க கேட்கலாம், சுப்ரிம் கோர்ட்டுக்கு கூட போகச்சொல்லுங்கள் என்று இரண்டு முறை அழுத்தம் திருத்தமாக சொல்லி அவரது அதிகார தோரணையை வெளிப்படுத்தினார்.

 இந்த புகாரை பொறுத்தவரை கட்டபஞ்சாயத்து ஆசாமி என்று கூறப்படும் இர்ஷாத்,  அவரை அருகில் வைத்துக் கொண்டு மிரட்டிய  இன்ஸ்பெக்டர் கேத்ரின் மேரியின் பெயரும் தான் மதாரின் சாவுக்கு காரணமாக இருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதில் இர்ஷாத்தின் பெயரை குறிப்பிட்டு ஏற்பகனவே டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டதாம். போலீசாரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் இந்த விவகாரம் மாநில மனித உரிமை ஆணையத்தின் வாசலை தொடவிருக்கிறது.