2 பெண் எஸ்.ஐ.க்கள் கைது! லஞ்சம் பெற்றதால் சிக்கினர்!

2 பெண் எஸ்.ஐ.க்கள் கைது! லஞ்சம் பெற்றதால் சிக்கினர்!

 தி.விநோத்,

 ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக  பணியாற்றி வந்தவர் ஜெனிபர். அதே காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளராக பாக்கியலட்சுமி பணியாற்றி வந்தார்.

 திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், அவருக்கு சாதகமாக செயல்படவும் இருவரும் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.

 புகாரின் பேரில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டனர். அதன்படி, புகார்தாரரிடம் இருந்து ரூ.20,000 லஞ்சம் பெற்றபோது, ஜெனிபர் மற்றும் பாக்கியலட்சுமியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

 இதனைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருந்தாத பணப் பேய்கள்,