படிதாண்டிய மனைவியை நரம்பு அறுத்து கொன்ற கணவன்!
கு.அசோக்,
பேரணாம்பட்டு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவனை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கூத்தாண்டவர் நகர் பகுதி சேர்ந்த விஜயகுமார் (49) தனலட்சுமி (38) தம்பதிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் விஜயகுமார் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி தனலட்சுமி பேரணாம்பட்டு நகரப் பகுதியில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார்.
மனைவி தனலட்சுமி திருமணம் தாண்டிய உறவில் குமரேசன் என்பவரிடம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஜயகுமார் தனலட்சுமியை பலமுறை கண்டித்து எச்சரிக்கை செய்தும் தனலட்சுமி கள்ள உறவை கைவிடவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்படியிருக்க விஜயகுமார் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் மேல்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மேல்பட்டி போலீசார் விஜயகுமார் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டு ஸ்லாப்பில் இரண்டு கால்கள் கட்டப்பட்டு இரண்டு கை மணிகட்டுகள் அருப்பட்ட நிலையில் தனலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
தனலட்சுமியின் கணவர் விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனா.¢விசாரணையில் கணவர் விஜயகுமார் மனைவி தனலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது.
நேற்று முன்தினம் வழக்கம்போல் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில் தனலட்சுமி விஜயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் அறிவாளால் தனலட்சுமி கழுத்தை அறுத்து கைகளை கட்டி கை நரம்புகளையும் அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்ததும் உடலை எடுத்து வீட்டின் சமையலறை பரண் மேல் போட்டதும் தெரியவந்தது.
மேலும் பள்ளியில் இருந்து வந்த குழந்தைகளுக்கு அம்மா ஊருக்கு போய் உள்ளதாகவும் கூறியதும் தெரியவந்தது இதனையடுத்து விஜயகுமாரை மேல்பட்டி போலீசார் கைது செய்தனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவனை கொலை செய்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

admin
