ஹீலியம் பலூனை பறக்கவிட்ட கலெக்டர்!
ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்காளர் விழிப்புணர்வு ராட்சதப்பலூன் பறக்க விடப்பட்டு, விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.
23 ஏப்ரல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பொது பார்வையாளர் யாஷா முத்கல், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொது பார்வையாளர் முகுல்குமார் பங்கேற்று குறும்படம் வெளியிட்யனர்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட பறவையான சாம்பல் நிற இருவாச்சி வாக்கு ராணியாக திருப்பத்தூர் மாவட்ட மக்கள் அனைவரும் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மேலும் என் வாக்கு என் உரிமை என்று கைவிரல் சின்னம் வடிவில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் வரிசையாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் விஜயகுமாரித் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் பங்கு பெற்றனர்.

admin
