தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் மத்திய அரசு அவசரபடக் கூடாது!சிபிஎம் செயலாளர் கருத்து!

தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் மத்திய அரசு அவசரபடக் கூடாது!சிபிஎம் செயலாளர் கருத்து!

கு.அசோக்,

 தொகுதி மறுசீரமைப்பு செய்வது குறித்து மத்திய அரசு அவசரபடக் கூடாது இது ஐந்து மாநிலங்களின் தேர்தலை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படுகிறது தமிழக முதல்வரின் பேச்சு வரவேற்கதக்கது சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் வேலூரில் பேட்டி

  வேலூர்மாவட்டம்,தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் சாம்சங்க் நிறுவனத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.

  அவர்களை சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் நேரில் சென்று நலம் விசாரித்தார்

   பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாம்சங் தொழிற்சங்கத்தில் போராட்டம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

  தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் உள்ள இந்த நேரத்தில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும்,இது போன்று பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

 சிறையில் அவர்கள் முத்துக்குமாரை தனிமைப்படுத்தியுள்ளனர் இதுகண்டிக்கதக்கது மேலும் உடனடியாக நிபந்தனையின்றி இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோருகிறோம்.

   தமிழ்நாடு தேர்தல் களத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசு இல்லாத நிலையில் அதிகாரிகள் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யபோவதாக அறிவித்துள்ளது.

  இது தமிழ்நாட்டுக்கு பாதகத்தையும் வஞ்சிக்கும் செயலாகும்.

  இதுகுறித்து தமிழக முதல்வர் போராட்டங்கள் வெடிக்கும் என அறிவித்துள்ளது வரவேற்கதக்கது.

  இன்னும் காலமுள்ள நிலையில் 5 மாநிலங்களின் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அவசர அவசரமாக இதனை கொண்டு வருவது அரசியல் உள் நோக்கம் கொண்டது.

  மேலும் தமிழகத்திற்கு பாதகம் ஏற்படுகிறது என்பதா;ல் தான் தமிழக முதல்வர் பிரதமருக்கு இதனை எச்சரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளார் என கூறினார்.

  பேட்டியின் போது வேலூர் மாவட்ட செயலாளர் சங்கரி,.காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் நேரு ஆகியோர் உடன் இருந்தனர் .