நீதிமன்றத்துக்கே டோக்கா கொடுக்கும் திருவள்ளூவர் பல்கலை!

நீதிமன்றத்துக்கே டோக்கா கொடுக்கும் திருவள்ளூவர் பல்கலை!

கு.அசோக்,

   வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமனம் அளித்து இன்று சேர உத்தரவிட்டனர். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உத்தரவு வழங்கிய திருவள்ளூவர் பல்கலைகழகத்தை கண்டித்து பணியாளர்கள் ஆர்பாட்டம் இன்று 66 பேரும் பணியில் சேர்ந்தனர்.

 வேலூர்மாவட்டம்,சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு 66 பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

  இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், 66 தொழிலாளர்களையும் ஊதிய உயர்வுடன் அவர்கள் பணிபுரிந்த அதே இடத்தில் பணியில் நியமிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  அதன் அடிப்படையில் ¢ 66 தொழிலாளர்களில் 27 பேரை தட்டச்சர்களாகவும் 24 போஎரை அலுவலக உதவியாளராகவும் 2 பேரை ஓட்டுநராகவும் 11 பேரை மலம் அள்ளும் தொழிலாளர்களாகவும் 8 ஆண்டுகளாக ஊதிய உயர்வு எதுவுமின்றி இன்று பணியில் சேருமாறும் அவர்களுக்கு உத்தரவு வந்தது.

   இந்த வழக்கு வரும் 17-3-2026 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் சீக்கிரமாக இதனை செயல்படுத்துகின்றனர்.

   நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டதை கண்டித்து பல்கலைக்கழக தொழிலாளர் சங்க கௌரவ  தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்பாட்டம் செய்தனர்.

  இதில் குமார் மற்றும் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.