ரஜினியை வம்புக்கு இழுத்த ஆதவ் அர்ஜூனா! புஸ்வானமான கூக்குரல்!
க.முகில்,
ரஜினியை வம்புக்கு இழுத்த ஆதவ் அர்ஜுனாவை எதிர்த்து எழுந்த ரஜினிகாந்த் க்கு ஆதரவான கூக்குரல்கள் புஸ்வானம் ஆனது.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் சட்டம்-ஒழுங்கை சீர்செய்யக்கோரியும் நேற்று தவெக சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:
தமிழகத்தில் 2 வயது குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதைப் பற்றியெல்லாம் முதல்வருக்கு கவலை இல்லை. இதுபற்றி எல்லாம் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளோ, விசிகவோ பேசுவதே இல்லை. அவர்களுக்கு மக்களின் நலனை விட சீட்டுகள்தான் பெரிதாக தெரிகிறது.
எம்ஜிஆருக்கு பிறகு, தமிழகத் தில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றுகூறி, ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். திமுக குடும்பம் மிரட்டல் விடுத்து அவரை வர விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
ரஜினியை விமர்சிக்க வில்லை. அவர், 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தில் நடிக்கப் போய்விட்டார். மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய மதிமுக, விசிக, மநீம கட்சிகள் மற்றும் பன்னீர் இப்போது திமுகவுடன் இருக்கிறார்கள். ரெட் ஜெயன்ட்டில் நடிக்கப் போய்விட்டார்.
விஜய் மட்டும்தான் மிரட்ட முடியாத, விலைக்கு வாங்க முடியாத தலைவராக இருக் கிறார். அந்த அளவுக்கு அவருக்கு மனவலிமை. இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்தனர். அதற்கெல்லாம் கவலைப் படாமல் மகளிர் தினத்தில் பெண்களுக்கான 12 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
மக்களை சந்திக்க விடாமல் விஜய்யை தடுக்கிறார்கள். தேர்தல் அறிவித்த பிறகு தெருத்தெருவாக விஜய் வரும்போது, மக்கள் எழுச்சியை பார்ப்பீர்கள் என பேசினார்.
ஆதவ் அர்ஜூனா ரஜினியை சுட்டிக்காட்டிப் பேசியதற்கு ஒரு சில புஸ்வானங்கள் மட்டுமே எழுந்து அடங்கியது.
மற்றபடி அவரது ரசிகர்கள் பெருசா எதுவும் பொங்கவில்லை.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உட்பட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

admin
