மகளிர் கிரிக்கெட் அணிக்கு வேலூர் வீராங்கனைகள் தேர்வு! சங்கத் தலைவரும் நறுவீ மருத்துவமனை சேர்மன் ஜி.வி. சம்பத் அறிக்கை!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கதலை வரும், நறுவீ மருத்துவமனை தலைவரு மான ஜி.வி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்டங்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளை யாடுவதற்கான வேலூர் மாவட்ட மக ளிர் கிரிக்கெட் அணிக்குஇளம் வீராங்க னைகள் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வேலூர் கொணவட்டம் ராஜேஸ்வரி வளாகத்தில் அமைந் துள்ள வேலூர் மாவட்ட கிரிக்கெட் அகாடமியில் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் 1.9.1996-க்கு பின்னரோ அல்லது 31.8.2014 முன்னதாகவோ பிறந்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு வருபவர்கள் ஆதார் சான்று நகல், பிறந்த தேதி சான்று நகல், கிரிக்கெட் கிட் மற்றும் வண்ண உடை அணிந்து வரவேண்டும். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக் கெட் சங்க மகளிர் விளையாட்டு பிரிவு நிர்வாகி லோகேஸ்வ ரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

admin
