நறுவீ மருத்துவமனை சார்பில் கல்வி உதவித் தொகை! நிறுவனர் பிறந்த நாளை யொட்டி வழங்கல்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.வி. சம்பத்தின் பிறந்த நாள் விழா டிச-8 சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பங்கேற்கற்றனர்.
அவர்கள் முன்னிலையில் ஜி.வி. சம்பத் பிறந்த நாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
ஜி.வி. சம்பத் அவர்களின் பிறந்த நாளையொட்டி ஏழை குடும்பத்தினர் 50 பேருக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் 27 பேருக்கு கல்வி உதவி தொகை மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நல உதவி திட்டங்களை அவர் வழங்கினார்.
முன்னதாக ஜி.வி.சம்பத் அவர்களை அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள், வீட்டில் சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.