200 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு..ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்!
ஜி.கே.சேகரன்,
வக்பு வாரியத்துக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு..ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார் பெரும்பான்மையாக சிறுபான்மைமக்கள் தான் இருந்து வருகிறார்கள் இவற்றில் இருக்கக்கூடிய அரசு கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் இருக்கும் சிறுபான்மையினர்களை விழிப்புணர்வு இல்லாமல் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொடுப்பது எங்களுடைய குறிக்கோள் என தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொஜோ அருண் சசே செய்தியாளர்களுக்கு பேட்டி.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொஜோ அருண் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசவந்தரவல்லி கலந்துகொண்டு சிறுபான்மையினர் உடன் கலந்துரையாடினார்
பின்பு செய்தியாளருக்கு அவர் பேட்டி அளித்தா£.¢ இதுவரை நாங்கள் மேற்கொண்ட 33 மாவட்டங்களில் 939 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 771 அந்தந்த மாவட்டத்தில் நடத்தக்கூடிய சிறுபான்மையினர் ஆய்வுக் கூட்டத்திலேயே தீர்வு கண்டு உள்ளோம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் துறையிலும், மாவட்ட காவல் துறையிலும் சிறுபான்மையினருக்கு வழங்கக்கூடியமேலும் சிறுபான்மை ஆணைத்தின் சார்பாக சிறுபான்மையர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சிறுபான்மை மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் அதற்கான ஆய்வுகளை சரியாக செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். 38 மாவட்டத்திற்கு சென்று சிறுபான்மைனிற்கு குறைகளை தீர்வு கண்டிருக்கிறோம் என்றால் இந்த ஆணையம் தான் என பெருமிதமாக கூறினார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பொழுது அவர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினார்கள், அதில் 70% அப்பொழுதே தீர்வு கண்டுள்ளோம் என தெரிவித்தார்.
தனிநபர் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது என தெரிவித்தார்கள் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் என கூறினார்
சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒரு வாரத்திற்குள் அனைத்தையும் செய்து கொடுப்போம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததின் பெயரில் நாங்களும் சிறுபான்மையின் மூலம் ஒரு குழுவை அமைத்து மேற்பார்வைக் கொண்டு செயல்படுத்துகிறாரா இல்லை என பார்வையிடுவோம் என தெரிவித்தார்.
பின்பு வக்பு வாரியத்தின் சார்பாக 200 கோடி ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் காவல் கண்காணிப்புடன் மனு அளித்தும் இதுவரையிலும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு வகுப்பு வாரியம் இருந்தது இப்பொழுது அது கலைக்கப்பட்டது.
இப்பொழுது இருக்கக்கூடிய இது சம்பந்தமான அரசு அதிகாரிகள் சிஓ இது போல் இருக்கக்கூடிய நடவடிக்கைகளை உடனடியாக சரி செய்து தரவேண்டும்.
இது சம்பந்தமான புகார் என்னிடம் வந்தது ஐந்து நாட்களுக்குள் இதனை விசாரித்து சரி செய்து எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என அது சார்ந்த அதிகாரிகளிடம் கூறியுள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களுக்கு உடனடியாக விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் அவர்களுக்கு தேவையான நல திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டி என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம்.
மாவட்ட ஆட்சியரும் ஒரு வாரத்திற்குள்ளாக நாங்கள் செய்து கொடுக்கிறோம் என என தெரிவித்தார் எனக் கூறினார்.

admin
