பெண்களுக்கு பிங்க் பூங்காவாம்! அப்படியே பயனற்ற பூங்காக்களையும் கவனியுங்களேன்!
ஜி.குலசேகரன்,
வேலூர் மாநகராட்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பெண்களுக்கான பிரத்யோக பிங்க் பூங்காக்கள் பட்ஜெட்டில் மேயர் சுஜாதா அறிவிப்பு
வேலூர்மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில் குமார் மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம் எல் ஏ கார்த்திகேயன் கலந்து கொண்டார். வேலூர் மாநகராட்சியின் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை வரி விதிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு குழு தலைவர் ரவிக்குமார் தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை மேயர் சுஜாதா வாசித்தார்.

இந்த பட்ஜெட்டில் 112 வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் ரூ 52 கோடி செலவில் புதிய சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை பராமரித்தல். ரூ.6 கோடி மதிப்பீட்டில் நான்கு மண்டலங்களில் பெண்களுக்கான பிரத்தியோக பிங்க் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சியின் மொத்த வருவாய் 853.73 கோடி. செலவினம் 851.67 கோடி. உபரி வருவாய் ரூ.1. 6 கோடி என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பலபகுதிகளில் பூங்காக்கள் பராமரிப்பு அற்றுக் கிடக்கிறது. அவை தற்போது சமூக விரோதிகளுக்காக பயன்பாட்டில் இருக்கிறது. அவற்றையும் சற்று சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்தால் நலம் என்பது மக்களின் வேண்டுகோள்.

admin
