அதிமுகவில்  கொங்கு மற்றும் வடக்கு மண்டல டேரா காலி! பல எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?!

அதிமுகவில்  கொங்கு மற்றும் வடக்கு மண்டல டேரா காலி! பல எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?!

ம.பா.கெஜராஜ்,

  அதிமுகவில்  இருந்து இன்னும் 10 எம்எல்ஏ-க்கள் வரை இழுத்துப் போடும் திட்டத்தில் இருக்கிறதாம் ஆளும் கட்சி. ஜூலை 2-ம் தேதி அதாவது நாளைக்கு இது தொடர்பாக மெகா 'இழுப்பு மேளாவை' நடத்தவும் தயாராகிறார்களாம். இதில், ஏற்கெனவே 'பேசி முடித்து' வளைத்து வைத்திருப்பவர்களை தவிர, அதிமுகவின் மாதர் அணியை வழிநடத்திய 'மதியான' முன்னாள் மாண்புமிகுவும் இன்னொரு முன்னாள் மாண்புமிகுவான 'ரிவர் மைந்தரும்' இதில் முக்கியஸ்தர்களாம்

 இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தின் விவிஐபிகளும் அணி திரள்கிறார்களாம்.

  மேலும்  கொங்கு மண்டலத்தின் முக்கியமான முன்னாள் மாண்புமிகுவும் தனது ஆதரவாளர்கள் சகிதம் இந்த 'இழுப்பு மேளாவில்' பங்கேற்க இசைந்திருப்பதாகச் கூறப்படுகிறது.

  இவர்கள் அனைவருமே முடிந்தவரைக்கும் இன்னும் சில எம்எல் ஏ-க்களையும் கட்சி பொறுப்பாளர்களையும் 'பனையூர் மேளாவிற்கு' அழைத்துச் செல்ல பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

 ஆகேவே எம் எல் ஏ-க்கள் இன்று அல்லது நாளை கைப்பட ராஜினாமா கடிதங்களை எழுதிக் கொண்டு சபாநாயகர் முன் வரிசைக்கட்டக்கூடும்.