வயிற்று மீது பாறை உடைத்து சாகசம்! கராத்தேவில் பரிசுகள்!

வயிற்று மீது பாறை உடைத்து சாகசம்! கராத்தேவில் பரிசுகள்!

கு.அசோக்,

  ஆற்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஜப்பான்  ஷீட்டோ-ரியூ கராத்தே பயிற்சி பள்ளியின் 25 ஆவது ஆண்டை  முன்னிட்டு பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பயிற்சியாளரும் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரான ரமேஷ் பாபு தலைமை வகித்தார். மேலும் ஜப்பான் ஷீட்டோ-ரியூ கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரக்கூடிய 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கிடையே தற்போது போட்டிகள் நடத்தப்பட்டது.

  இதன் மூலம் வெற்றி பெற்றவர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் போட்டி நடத்தும் குழுவினரின் மூலம்  வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.

   நிகழ்ச்சியின் போது, கராத்தே பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் வால் சுழற்றுதல், சிலம்பம் சுற்றுதல், கராத்தே முறையில் தற்காத்துக் கொள்வது எதிரிகளை தாக்குவது, மேலும் பாறைகளை வயிற்றில் வைத்து உடைத்து சாகசம் செய்வது, வயிற்றின் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி சாகசம் செய்வது கைகள் மற்றும் தலைகளால் ஓடுகளை உடைப்பதுபோன்ற பல்வேறு வீர சாகசங்களை செய்தனர்.

 அவற்றை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பார்த்து வியந்தனர்.

   மேலும் இந்த நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சி பள்ளி மாஸ்டர் முருகன் மற்றும் சரவணகுமார் உள்ளிட்ட சக மாஸ்டர்களும் சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் என பலர் பங்கேற்று இருந்தனர்