தாய் வீடு திரும்பினோம்! பஞ்சமி நிலம் மீட்க களம் காண்கிறோம்! தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியில் மீண்டும் இணைந்த பொன் குணசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள்
செய்தி: எஸ். சதீஷ்
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியில் மீண்டும் இணைந்துள்ள பொன் குணசீலன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள சமத்துவத் தலைவர் மறைந்த கே. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில், அவரது மனைவி கே. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை, மாநிலப் பொருளாளர் கே.பி.எஸ். சரவணன் தலைமையில் நேரில் சந்தித்த பொன் குணசீலன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி ஆசி பெற்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, பொன் குணசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது தாய் வீடான தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொன் குணசீலன் வெளியிட்டுள்ள தகவலில், ஏற்கனவே மறைந்த தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சியில் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியதாகவும், அவர் முன்னெடுத்த சாதி ஒழிப்பு, சமத்துவம் மற்றும் உரிமைப் போராட்டப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவே மீண்டும் கட்சியில் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பஞ்சமி நிலங்களை மீட்டு, நிலமற்ற மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்பதே தங்களது வாழ்நாள் லட்சியம் என்றும், இதற்காகத் தொடர்ந்து களப்பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் விவரம்:
மாநிலப் பொறுப்பு:

பொன் குணசீலன் – மாநிலச் செயலாளர்.
வேலூர் மாவட்டப் பொறுப்புகள்: 2. துரை சரவணன் – மாவட்டத் துணைத் தலைவர். 3. எஸ். ஆட்டோ ரஜினி – மாவட்ட இளைஞரணித் தலைவர். 4. கே. பழனி – மாவட்டச் செய்தித் தொடர்பாளர். 5. டி.கே. சுஹேல் அஹமத் – இஸ்லாமியர் சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளர்.
பேரணாம்பட்டு ஒன்றியப் பொறுப்புகள்: 6. ராஜி – ஒன்றியத் தலைவர். 7. முல்லை ஆஜி – ஒன்றியச் செயலாளர். 8. பொன் சங்கர் கணேஷ் – ஒன்றியத் துணைச் செயலாளர். 9. எம். பாண்டியன் – ஒன்றியத் துணைச் செயலாளர், ஆம்ஸ்ட்ராங் பேரவை. 10. டி. வெங்கடேஷ் – ஒன்றியப் பொருளாளர். 11. கே. ராஜா – ஒன்றியத் துணைப் பொருளாளர்.
பேரணாம்பட்டு நகரப் பொறுப்புகள்: 12. எம். ஏகதாஸ் – நகரத் தலைவர். 13. எம். சுரேஷ் (எ) முருகப்பன் – நகரச் செயலாளர். 14. ஏ. முகமது உஸ்மான் – இஸ்லாமியர் சிறுபான்மைப் பிரிவு நகரச் செயலாளர். 15. டி. புகழேந்தி – நகர இளைஞரணிச் செயலாளர்.
அணிகள் மற்றும் பேரவைப் பொறுப்புகள்: 16. வி. பப்லு (எ) வசந்தகுமார் – ஒன்றிய இளைஞரணிச் செயலாளர். 17. வி. தமிழ்ச்செல்வன் – ஒன்றிய இளைஞரணித் துணைச் செயலாளர். 18. எம். கார்த்திக் – ஒன்றிய மாணவரணித் தலைவர். 19. கே. சிம்பு – ஒன்றியத் தொழிற்சங்கத் தலைவர். 20. கே. காளியப்பன் (எ) சிலம்பரசன் – ஒன்றிய ஆம்ஸ்ட்ராங் பேரவைச் செயலாளர்.
பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற மக்களுக்கு வழங்குவதற்கான பணிகளை முன்னெடுப்பதுடன், சாதி ஒழிப்பு மற்றும் சமத்துவச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்படப் போவதாக புதிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

admin
