ஒருதலை காதல் மாணவிக்கு கத்திக்குத்து! குத்தியவர் தற்கொலை!
கு.அசோக்,
கல்லூரி மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் தப்பி ஓடி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி ராம்சேட் நகர் பகுதியை சேர்ந்த அப்சல் ஷரீப்புக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனா. இதில் அவரது மகள் ஆயிஷா பர்வீன் 19 என்பவர் டி.கே.எம் கல்லூரியில் உயிரி தொழில்நுட்பம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அப்படியிருக்க நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக ஆயிஷா பர்வீன் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார் அப்போது பின் தொடர்ந்து வந்த அரியூர் ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த வினோத் 19 இருச்சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து தன் கையில் வைத்திருந்த காய் அறியும் கத்தியால் ஆயிஷா பர்வினை கழுத்து மற்றும் இடது பாக்க வயிற்றில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கீழ விழுந்த ஆயிஷா பர்வினை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆயிஷா பர்வினுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்

ஆயிஷா பர்வீனை கத்தியால் குத்தி சென்ற வினோத், 12ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்ததும் ஆயிஷா பர்வினை ஒரு தலை பட்சமாக காதல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வினோத் இந்த பெண்ணை பின் தொடர்ந்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தனது வீட்டில் உள்ள பெட் ரூமில் தூக்குமாட்டி இறந்துள்ளார். பின்பு வினோத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா.
¢இந்த சம்பவம் குறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதல் தோல்வியால் அந்தப் பெண்ணை கத்தியால் குத்தி விட்டு சென்றாரா இல்லை வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admin
