உண்மையை கண்டுபிடிக்கும் வரை யூகம்கூடாது? மீறினால் நடவடிக்கை!

டி.முகமது இர்பான்,
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்திய விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதியின் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக பொய் செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தொடர்பாக குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 153, 505/1 , 504 பிரிவுகளில் வழக்கு பதிவு செ?யப்பட்டுள்ளது.
விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.