சிறப்பு நிலை கிராம நிருவாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை!
கு.அசோக்
இருபதாண்டு பணிமுடித்த கிராம நிருவாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் சானு தலைமையில் நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 29 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டர்.
அதில் கிராம நிருவாக அலுவலகத்திற்கு கழிப்பறை, றை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் வேண்டும்.
கிராம நிருவாக அலுவலர்களின் நேரடி நியமான முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல்.
கிராம நிருவாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும், இருபதாண்டு பணிமுடித்த கிராம நிருவாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிருவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரங்களுக்கேற்ப, 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பை ஆறு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட வேண்டும்.
தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க கோருதல்.
பட்டா மாறுதலில் கிராம நிருவாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.

admin
