குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

ஜி.கே.சேகரன்,

ஆம்பூரில், குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்.

 திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட, கன்னிகாபுரம் பகுதியில் உள்ள பெங்களூர் சென்னை  தேசிய நெடுஞ்சாலையோரம் செடி, கொடி மற்றும் குப்பைகள் உள்ளன.

 அவற்றுக்கு மர்மநபர்கள், தீ வைத்த நிலையில், அதிக அளவு தீ பரவியதால், உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர்  தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனா.

   அக்கம் பக்கம் தீ பரவாமல் இருக்க தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அனைத்தனர்