ஐஏஎஸ் - ஐபிஎஸ் கள் மீது நடவடிக்கை!

ஐஏஎஸ் - ஐபிஎஸ் கள் மீது நடவடிக்கை!

 ஜி.சாந்தகுமார்,

 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 அந்தவகையில் 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த   அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

 இந்தப் பரிந்துரை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.