ஜூஸ் கடை தகர்ப்பு... ஆம்பூரில் பரபரப்பு!

ஜூஸ் கடை தகர்ப்பு... ஆம்பூரில் பரபரப்பு!

ஜி.குலசேகரன்,

ஆம்பூர் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில்  ஆக்கிரமித்துக் தேனீர் மற்றும் பழச்சாறு கடை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது 

     திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையை ஒட்டி ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

அங்கு, அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்து கடை கட்டி கேரள மாநிலம், மல்லபுரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முகமது கோயா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

  அதன் அடிப்படையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டும்போது ரயில்வே துறை  அதிகாரிகள் எச்சரித்தும் அவர் திட்டத்தை கைவிடவில்லை. 

இதனைத் தொடர்ந்து ரயில்வேத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் கடையை காலி செய்ய கடந்த 14ஆம் தேதி சம்பந்தப்பட்ட  சேகருக்கு நோட்டீஸ்  வழங்கப்பட்டது.

அதனை சேகர் கண்டு கொள்ளாத நிலையில் நேற்று ரயில்வேத்துறை உதவி பொறியாளர் நிர்மல் குமார் தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வருவாய் துறையினர் முன்னிலையில்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

  இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள்  இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

 ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை வாடகைக்கு எடுக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது கோயாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கவில்லை எனவும் திடீரென கடை இடித்து தள்ளப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் மாற்று ஏற்பாடு செய்வது அறியாமல் திகைத்து நின்றார்