திருடர்களுடன் கூடா நட்பு! திருப்பத்தூர் மாவட்ட நகை வியாபாரிகள் பரிதாபம்!

திருடர்களுடன் கூடா நட்பு! திருப்பத்தூர் மாவட்ட நகை வியாபாரிகள் பரிதாபம்!

ஜி.குலசேகரன்,

 திருப்பத்தூர் பகுதியில் திருட்டு நகை வாங்கியதாகவும் அதனை திரும்ப தருமாறு கூறி திருப்பத்தூர் அதிமுக நகர செயலாளர் மகனை கைதுசெய்த கர்நாடகா போலீஸார் அதனை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் 34 வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் அதிமுக நகர செயலாளர் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர், பச்சூர் , ஆந்திரா மாநிலம் குப்பம் ஆகிய பகுதிகளில் நகை வியாபாரகடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.

 இந்த நிலையில் மதுரை,சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான  கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மதுரை பகுதியை சேர்ந்த பட்டறை சுரேஷ் என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருட்டு வழக்கில் ஆந்திர மாநில போலீசார் பட்டறை சுரேஷ் கைது செய்து விசாரணை செய்தனர்.

 அப்போது குப்பம் பகுதியில் உள்ள அதிமுக திருப்பத்தூர் நகர செயலாளர் சரவணன் என்பதற்கு சொந்தமான நகைக்கடையில் திருட்டு நகையை அடகு வைத்ததாக கூறியுள்ளார்.

    அதன் பேரில் ஆந்திரா போலீஸ் 10 சவரன் தங்க நகையை கொடுக்குமாறு நகைக்கடை உரிமையாளர் சரவணன் கேட்டனர். 

  அப்படியிருக்க சரவணன் சுரேஷிடம் நான் இந்த திருட்டு நகையும் வாங்கவில்லை என பலமுறை விளக்கமளித்தும் ஆந்திரா போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படும் என எண்ணி 10 பவன் தங்க நகையை ஆந்திரா போலீசிடம் நகைக்கடை உரிமையாளர் சரவணன் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

   அதனைத் தொடர்ந்து மீண்டும் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நகர போலீசார் திருட்டு வழக்கில் பட்டறை சுரேஷ் மீண்டும் விசாரணை செய்ததில் தான் திருடிய நகையை அதே சரவணன் கடையில் வைத்ததாக கூறியதின் அடிப்படையில் 51 சவரன் தங்க நகையை தருமாறு இரண்டு நாட்களுக்கு முன்பு நகைக்கடை உரிமையாளர் சரவணனுக்கு கர்நாடகா போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர்.

   ஆனால் நகைக்கடை உரிமையாளர் பட்டறை சுரேஷ் என்ற நபரிடம் எந்த ஒரு திருட்டு நகையும் நான் வாங்கவில்லை என மறுத்து வந்தார்.

  பின்னர் நேற்று அதிகாலை திருப்பத்தூர் காமராஜர்நகர் பகுதியில் உள்ள சரவணன் வீட்டை கர்நாடகா மாநிலம் பங்காரப்பேட்டை நகர போலீசார் சுத்து போட்டு, நகைகடை உரிமையாளர் சரவணன் என்பவரின் மகன் சந்துரு என்பவரை  கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களின் கட்சியின் நிர்வாகி மீது பொய்யான அவதூறு பரப்பி வருவதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

   தமிழக திருட்டு நபர்கள் பலர் ஆந்திரா மற்றும் கர்நாடகா பொலீசாரிடம் கூட்டு வைத்துக் கொண்டு தமிழக நகைக்கடை வியாபாரிகளிடம் மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறிப்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்த செயலை அந்தந்த பகுதி சங்கத்தினர் வாயளவில் எதிர்த்து வருகிறார்கள்.