வல்லம் டி.எஸ்.பி. காயத்ரி காத்திருப்போர் பட்டியலில் தூக்கி அடிக்கப்பட்டார்!

வல்லம் டி.எஸ்.பி. காயத்ரி காத்திருப்போர் பட்டியலில் தூக்கி அடிக்கப்பட்டார்!

.ஆர். பாலகுரு,

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் சரக டி.எஸ்.பி., காயத்ரி, தனது காவல் சரகத்தில் செம்மண் கடத்தலைத் தடுக்கத் தவறியதாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட நிர்வாக காரணங்களின் அடிப்படையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வல்லம் சரக டி.எஸ்.பி.யாக கடந்த 2025 டிசம்பரில் பொறுப்பேற்ற காயத்ரி, தனது கட்டுப்பாட்டில் நடைபெறும் செம்மண் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் புகார்கள் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்களை ஒருமையில் பேசியதாக எழுந்த சர்ச்சை மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களை முறையாக அணுகவில்லை என்ற புகார்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களுக்காக காயத்ரியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க தமிழக காவல்துறை தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டரும் காத்திருப்போர் பட்டியலில்
தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாவும், புகார் மனுக்களை முறையாக விசாரிக்காமல் காலதாமதம் செய்ததாகவும், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு எதிரே பொருள்காட்சி நடத்த அனுமதி வழங்கியதில் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் புகார்கள் எழுந்தது. 

இந்த நிலையில் அவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மண் கடத்தல் உள்ளிட்ட புகார்களில் காவல்துறையின் கண்காணிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நடவடிக்கைகள் மீண்டும் அறிவுறுத்தி இருக்கின்றன.

தVallam DSP Gayathri was thrown off the waiting list!