ஏ.எஸ்.பி. தனுஷ்குமார் ரகசிய தனிப்படை! காகிதப்பட்டறை லாட்ஜில் அதிரடி ரெய்டு! 6 புரோக்கர்கள், 6 பெண்கள் பிடிபட்டனர்!
ம.பாகெஜராஜ்,
வேலூர், ஆக.25: வேலூர் மாநகரின் மையப்பகுதியான காகிதப்பட்டறை பகுதியில் உள்ள லாட்ஜில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 6 புரோக்கர்கள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்கள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள எஸ்.பி. லாட்ஜ் எனக் கூறப்படும் விடுதியில் இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.
6 புரோக்கர்கள் பிடிபட்டதாக தகவல்!
போலீசாரிடம் சிக்கியவர்களில் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற ராக்கி, காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த பிரசன்னகுமார், குட்டி என்கிற மணி, கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த ஷாகிதா, ராட்சிதா மற்றும் திருப்பதி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் ஆகியோர் அடங்குவதாக கூறப்படுகிறது.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களும் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவரில் ஒருவர் திருப்பதி மற்றும் மற்றொருவர் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
புகார் சென்ற நிலையில் ஏ.எஸ்.பி. தனுஷ்குமார் அதிரடி!
குறிப்பிட்ட லாட்ஜில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஏற்கனவே வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதியினர் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் ஏ.எஸ்.பி. தனுஷ்குமார் கவனத்திற்கு புகாராக சென்றதாகவும், அதன் பின்னர் அவர் ரகசியமாக தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
6 பெண் போலீசார் மற்றும் 2 ஆண் போலீசார் கொண்ட குழுவினர் ரகசியமாக சென்று லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் சோதனைக்கு வந்ததை அறிந்த மேலும் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
லாட்ஜ் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

இந்த விவகாரத்தில் லாட்ஜை நடத்தி வந்த உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே சத்துவாச்சாரி பகுதியில் இதுபோன்ற குற்றச்சாட்டில் கட்டிடத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடக்கு காவல் நிலைய எல்லையில் தொடர் கண்காணிப்பு தேவை!?
வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் தங்கும் விடுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும் என்றும், போதைப்பொருள், ரவுடிகள் நடமாட்டம், பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாபுராவ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கேரளா லாட்டரி சட்டவிரோதமாக நடைபெறுவதாக கூறப்படும் புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏ.எஸ்.பி. தனுஷ்குமார் தலைமையிலான நடவடிக்கையை தொடர்ந்து, வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான சோதனைகள் மேலும் தீவிரமடையுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

admin
