பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்க தலைமை அலுவலகம் மற்றும் கலைவாணர் காலணியில் 80-வது சுதந்திர தின விழா! தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி, அன்னதானம் செய்தார் வி.எம்.தமிழன் வடிவேல்!

பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்க தலைமை அலுவலகம் மற்றும் கலைவாணர் காலணியில் 80-வது சுதந்திர தின விழா!  தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி, அன்னதானம் செய்தார் வி.எம்.தமிழன் வடிவேல்!

ஆர். ரமேஷ்,

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ளதென்னிலை கதிர் பத்திரிகை மற்றும்ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கலைவாணர் காலணி ஆகிய இரண்டு இடங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், தென்னிலை கதிர் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வி.எம். தமிழன் வடிவேல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்காவலர் கழுகுப் பார்வை நிர்வாக ஆசிரியர் வசந்தகுமார், சங்கத்தின் சட்ட ஆலோசகர் ரவிச்சந்திரன், கலைவாணர் காலணி மற்றும் விரிவாக்கம் இளைஞர் நற்பணி நலச்சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் கலை சுரேஷ், பொருளாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஏழுமலை, உடையார், செல்வா உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயக மாண்புகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, அனைவரிடையிலும் தேசப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.