தேம்பித் தேம்பி அழுத த.வெ க.வேட்பாளர் சத்தியபாமா... தோளில் கை போட்டு ஆறுதல் சொன்ன விஜய்!

தேம்பித் தேம்பி அழுத த.வெ க.வேட்பாளர் சத்தியபாமா... தோளில் கை போட்டு ஆறுதல் சொன்ன விஜய்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கொங்கு மண்ணைச் சேர்ந்த மக்களை தனது சொந்தங்களாக குறிப்பிட்ட விஜய், “உங்க வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக, தாய்மாமனாக வந்திருக்கிறேன்” என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து, தனது ஆட்சியின் குறுகிய கால செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்ட விஜய், மதுபானக் கடைகள் மூடல், இலவச மின்சாரம், போதை விழிப்புணர்வு, காலை உணவுத் திட்ட விரிவாக்கம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டார்.

திருப்பூர் தொழில் வளர்ச்சி மற்றும் ஜவுளி ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அரசியல் விமர்சனத்தை கையில் எடுத்த விஜய், “அண்ணாவையும் மறந்துவிட்டு திமுகவுடன் சுற்றுபவர்கள் நாங்கள் அல்ல” என்று கூறினார். திமுக ஆட்சியில் பல தவறுகள் நடைபெற்றதாகவும், அதனால்தான் மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், தன்னை எதிர்த்து எத்தகைய அரசியல் சதி முயற்சிகள் நடந்தாலும், மக்கள் மற்றும் கடவுள் துணை இருக்கும்போது எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தையும் விஜய் தனது உரையில் முன்வைத்தார். 

இதற்கு முன்னதாக மதுராந்தகம் பிரச்சாரத்தில் விஜய், “தீய சக்தி திமுக” என்ற அரசியல் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அப்போது திமுக–அதிமுக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

தாராபுரம் கூட்டத்தில் சத்தியபாமா பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய நிலையில், விஜய் அவரை தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய காட்சியும் கவனம் பெற்றது. 

என்னைப் பற்றி ஆபாசமாக பேசுகிறார்கள் நான் இரண்டு மாதமாக செல்போனை யூஸ் பண்ணுவதில்லை நான் பணம் வாங்கி இருந்தால் எனக்கு சீட்டு கொடுத்து இருக்குமா தலைமை .

இங்கு நான் வந்து உங்களிடம் ஓட்டு கேட்டு இருக்க முடியுமா என் மீது கூறப்படும் தகவல் அனைத்தும் பொய் என்று குருவி குலுங்கி அழுதார்

அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு, இந்தப் பிரச்சாரம் தேர்தல் களத்தில் அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது

தாராபுரம் பிரச்சாரத்திற்காக விஜய் அங்கு சென்றபோது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் அவருக்கு கட்சி துண்டை அறிவித்தார் விஜய்.