தொலைக்காட்சி சேனல்களுக்கு 6 புதிய விதிமுறைகள்!

ம.பா.கெஜராஜ்,
தாலிபான்களிடம் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருவதாக சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தாலிபன் அரசு 6 புதிய விதிமுறைகளை விடுத்துள்ளது.
1.ஷரியா சட்டங்கள் அல்லது இஸ்லாமிய சட்டங்கள், ஆப்கானிஸ்தானின் மதிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரானவை ஆக கருதப்படும் படங்களுக்கு தடை.
- ஆண்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை காட்டும் காணொளி படங்கள் காட்டக்கூடாது
- மதத்தை கொச்சைப்படுத்தும் அல்லது ஆப்கானியர்களைகப் புண்படுத்துவதாக கருதப்படும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவை ஒளிபரப்பக்கூடாது.
- வெளிநாட்டு கலாச்சார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டுப் படங்கள் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட கூடாது.
- ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள் ஒளிபரப்பக் கூடாது.
- அதிலும், பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தித் தொகுப்பாளர்கள் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணிந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட மேற்குலக படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில வாரங்களிலேயே, இளம்பெண்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வராமல் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
1990 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபன்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பணி இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.