அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு ஆதாரமற்றதாம்! 69000 கோடியை தொட்ட வர்த்தகம்!
ம.பா.கெஜராஜ்,
அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்ததை அடுத்து நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகளின் விலை ஒரு சதவீதம் முதல் 13 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்ததாகவும், கணக்கு வழக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஜனவரியில் குற்றம்சாட்டியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்து வந்தது.
ஆனாலும் அதானி குழுமப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது.
அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி முற்றிலும் நிராகரித்து. எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று செபி தெரிவித்துள்ளது.
தீவிர விசாரணைக்குப் பிறகு ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது. அதானி குழுமம் விதிமுறைகளை மீறி செயல்படவில்லை' என்று செபி அறிவித்ததை அடுத்து, அதானி பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.
இதையடுத்து, அதானி குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு வெள்ளிக்கிழமை ஒரே வர்த்தக தினத்தில் மட்டும் 69,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றம் கண்டது.

admin
