எஸ்.பி.உத்தரவின் பேரில் சாராய ஊறல்கள் அழிப்பு!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் சுமார் 3500 லிட்டர் சாராய ஊரல்,113 லிட்டர் சாரயம் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லை ஒட்டியுள்ள மாத கடப்பா மாத கடப்பாகொரிபள்ளம் தேவராஜபுரம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி அவர்களின் உத்தரவின் பெயரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொரிபள்ளம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக 3500 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல், 113 கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள் ஆகிவற்றை கண்டறிந்து அங்கேயே ஊற்றி அளித்தனர்.
மேலும் இது தொடர்பாக ஆந்திர மாநில சித்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (43) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admin
