ஆட்டு ரோமத்தால் நிலத்தடி நீர் பாதிப்பு! தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர் கோரிக்கை!.

ஆட்டு ரோமத்தால் நிலத்தடி நீர் பாதிப்பு! தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர் கோரிக்கை!.

ஜி.குலசேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.  

  தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தும் தோல்களை உப்பு நீரில் பதப்படுத்தி அதன் மூலம் வெளியேறும் உப்பு நீர் மற்றும் ஆட்டின் உரோமங்க கழிவுகளை வாணியம்பாடி அருகில் உள்ள பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள முட்புதர்களில் இரவு நேரங்களில் தனி நபர்கள் கொட்டுகிம்றனர்.

 இதனால் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசுவதோடு நிலத்தடி நீரும் கெட்டு போக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சமூக ஆர்வலர் பாலாஜி என்பவர் மனு அளித்துள்ளார்.

  மேலும் அப்பகுதியில் வாழும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.