ஒரிசா டூ ஆம்பூர் நீர்வழிப்பாதை உருவாக்கப்படுவது அது சாத்தியமா?கம்யூனிஸ்ட் கட்சி மா.செ.பேட்டி!

ஒரிசா டூ ஆம்பூர் நீர்வழிப்பாதை உருவாக்கப்படுவது அது சாத்தியமா?கம்யூனிஸ்ட் கட்சி மா.செ.பேட்டி!

கு.அசோக்,

   வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அதிகமான சீட்டுகளை கேட்போம், இந்தியா எந்த சூழலிலும் நெருக்கடியை சமாளிக்கும். ஆண்டுகளாக பிஜேபி அரசு அறிவிக்கின்ற பட்ஜெட் ஒரு பண்டோரா பாக்ஸ் இதில் தீமை தான் அதிகம் நன்மை ஏதும் இல்லைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி

  வேலூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோ£ வாழ்வுரிமை இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டார்.

   இந்த மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

   பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வீரபாண்டியன் கூறியதாவது பட்ஜெட் வெளியிடப்பட்டிருக்கிறது. இது 'விஷன் பட்ஜெட்' என்று சொல்கிறார்கள். விஷன் என்பது தூரப்பார்வை, தொலைநோக்கு. எந்த தூரப்பார்வையும் இல்லாத, எந்த தொலைநோக்கும் இல்லாத பட்ஜெட் இந்த பட்ஜெட்.

   இது நாடுகடந்த முதலாளிகளின் நலன்களைச் சுமந்து வந்திருக்கிற பட்ஜெட். தூரநோக்கு என்றால் பட்ஜெட் உள்ளூர் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும், தன்னியல் பில் உள்ளூர் தொழில் வளர வேண்டும். அது தற்சார்பில் தான் வளரும். சிறு தொழில், மரபுத் தொழில், பண்பாட்டுத் தொழில், கைத்தொழில் என்று பல தொழிலும் நாடுகடந்த நிறுவனங்களால் அழிந்துவிட்டது.

  எனவே இந்தத் தொழிலைப் பாதுகாக்கிற எந்த முயற்சியும் பட்ஜெட்டில் வெளிப்படவில்லை. வாராக்கடன் பற்றி இந்த பட்ஜெட் ஏதும் பேசவில்லை. இந்த பட்ஜெட் தமிழகத்தைப் புறக்கணித்திருக்கிறது.  தமிழக அரசாங்கத்திற்குத் தர வேண்டிய உரிய நிதி அது குறித்து மௌனம் சாதிக்கிறது.

  சுருங்கச் சொன்னால் இந்த பட்ஜெட் கிரேக்க இலக்கியத்தில் வருகிற 'பண்டோரா பாக்ஸ்அதைத் திறந்தால் தீமை தான் வரும்.

  ஏறத்தாழ எட்டு ஒன்பது ஆண்டுகள் ஒன்றிய அரசு பிஜேபி அரசு திறக்கிற இந்த நிதி பட்ஜெட் பண்டோரா பாக்ஸ். இதில் தீமை தான் அதிகம், நன்மை ஏதுமில்லை. எனவே இது தொலைநோக்கு பட்ஜெட் அல்ல, குறுகிய பட்ஜெட். இது ஜனநாயக பட்ஜெட் அல்ல, ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கிற பட்ஜெட் என்பது எங்கள் ஆழமான கருத்து." இந்த பட்ஜெட் ஜனநாயக பட்ஜெட் அல்ல, ஒரு நீதி நிறைந்த பட்ஜெட் அல்ல." என்றார்.

 தமிழ்நாட்டின் தலைநகரம் 'கொலை நகரம்' என்று சொல்கிற அளவுக்கு பிஜேபி கூட்டணி சென்றுவிட்டது. ஆயிரம் ஆண்டுகளில் மதக்கலவரமோ, ஜாதிக்கலவரமோ, இனக்கலவரமோ இல்லாத உலகத்திலேயே தலைசிறந்த நகரம் சென்னை. அதை பிஜேபி தலைவர்கள் 'கொலை நகரம்' என்கிறார்கள்.

   அப்படி என்றால் தோல்வியின் விளிம்பில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது பொருள்.  இது கொலை நகரம் அல்ல, கலை நகரம். அதைத் தமிழக மக்கள் தேர்தலில் உணர்த்துவார்கள்.

   எந்த வடிவில் வந்தாலும், எத்தகைய வியூகம் அமைத்தாலும் தமிழக மக்கள் ஒற்றுமையைத்தான் விரும்புவார்கள், மதச்சார்பின்மையை விரும்புவார்கள். வெறுப்பரசியலை, மத அரசியலை விரும்பமாட்டார்கள்.

   எனவே தமிழக மக்கள் பிஜேபியைப் புறக்கணிப்பார்கள். பிஜேபி கூட்டணி தோல்வியடையும். திமுக தலைமையிலான எங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி மகத்தான வாக்கு சூடும்." என்றார்.

  தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது குறித்த கேள்விக்கு, இது பொய். நீங்களே சொல்லுங்கள், தமிழ்நாடு அமைதியாக இல்லையா? நாள்தோறும் கலவரம், நாள்தோறும் படுகொலை, நாள்தோறும் தீங்குகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறதா தமிழ்நாட்டில்? கொள்கை பேச முடியாதவர்களால் இரைக்கப்படுகிற அவதூறு இது.

   'ஸ்லாண்டர் இஸ் எ பார்ட் ஆஃப் பாலிடிக்ஸ்என்று சொல்வார்கள். அதைத்தான் இன்றைக்கு பிஜேபி கூட்டணி கையில் எடுத்திருக்கிறது என்றார்..

 ஒரிசா டூ ஆம்பூர் நீர்வழிப்பாதை உருவாக்கப்படுவது அது சாத்தியமா? என்ற கேள்விக்கு, இந்த உலகில் சாத்தியமற்றது என்று ஏதுமில்லை. மனித முயற்சியில் விண்ணைத் தொட்டிருக்கிறோம்.  எனவே மனித சக்தியால் முடியாதது ஏதுமில்லை. அறிவியல், தொழில்நுட்பம், மானுட சக்தி - இதுதான் உலகை வெல்லும். அந்த கொள்கைதான் எங்கள் கொள்கை." என்றார்.   மேலும் தமிழகத்தில்எப்படி அறிவித்தாலும் தோல்வியடைந்து விடுவோம் என்கிற தெரிந்த காரணத்தினால் அவர்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை,

  வரும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்த கேள்விக்கு"எங்கள் கட்சியின் மாநிலக் குழு கூடும், பேச்சுவார்த்தைக் குழு அமைப்போம், பேசுவோம். அந்த முடிவை முதலில் உங்களுக்குத்தான் அறிவிப்போம்." சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும்  அரசியலை உயிர்ப்போடு வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஏழை உழைக்கும் மக்களின் கோரிக்கையின் குரலாக உள்ளோம்.

   இதனால் நாங்கள் அதிக சீட் கேட்கலாமா கேட்கக்கூடாதா நீங்களே கூறுங்கள் 100 ஆண்டுகால இயக்கம் அந்தத் தார்மீகம் உண்டா இல்லையா? கேட்கலாம் இல்லையா? அப்ப நாங்க கேட்போம். சூழலறிந்து முதல்வரும் பரிசீலிப்பார்." என்றார்.

  "வேலூர் மாவட்டத்துல உங்க கட்சி சார்பாகப் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு"நிச்சயமாக, அவ்வாறு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அவ்வாறு அந்த வாய்ப்பு கிடைத்தால் உங்களுக்கு அறிவிப்போம். நீங்களும் ஒத்துழைக்க வேண்டும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையெல்லாம் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்."என்றார்.

   அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்த கேள்விக்கு"அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியா அழிவது உறுதி. டாலர்தான் உலகத்தைத் தீர்மானிக்கிறது. உலக வங்கி டாலர், நிதி நிறுவனம் டாலர் - இந்த டாலர் ஆதிக்கம் இருக்கிற வரை அமெரிக்காவின் கை ஓங்கும்.

   டாலருக்கு மாற்று 'பிரிக்ஸ்'  - இந்தியா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பிரேசில்; இந்த நாடுகள் ஒன்றிணைந்து பிரிக்ஸ் என்கிற ஒரு பொது நாணயத்தை உருவாக்குகிறார்கள். இது உருவானால் உலகத்தில் சமநீதி ஏற்படும்.

  அமெரிக்காவின் அட்டகாசம், அடக்குமுறைகள் நீங்கள் அறிந்தது, அறிவுலகம் அறிந்தது. எனவே இதை எதிர்த்துப் போரிடுவதற்கு பிரிக்ஸ் எழுந்திருக்கிறது. பிரிக்ஸ்தான் எதிர்காலம், அது வெல்ல வேண்டும்.

  இந்தியா எந்தச் சூழலிலும் நெருக்கடியைச் சமாளிக்கும்.  பொதுத்துறை இன்றைக்கு நம் கரங்களில் இருக்கிறது. பொதுத்துறை என்பது சோசலிசக் கூறு. உலக வங்கியெல்லாம் விழுந்த போது இந்திய வங்கி விழவில்லை; அதற்குக் காரணம் பொதுத்துறை. ஒருவேளை பொதுத்துறை அத்தனையும் விழுந்துவிட்டால் இந்தியா பொருளாதாரத்தில் விழுந்துவிடும்.

   உலகப் பொருளாதாரத்தை நமது பொதுத்துறைதான் சமாளிக்கிறது. எனவே பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்று சொன்னார்.