கோழி வளர்ப்பிற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை!
கு.அசோக்.
கோழி வளர்ப்பிற்கு நிர்ணயம் செய்த தொகையை உயர்த்தி தரக் கோரியும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முறையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கறி கோழி பண்ணை உரிமையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உள்ளது. வளர்ப்பிற்கு கிலோ 1க்கு 6ரூபாய் 50 காசு கறிக்கோழி குஞ்சு வழங்கும் நிறுவனம் சார்பாக வழங்கப்படுகிறது.
ஆனால் கறிக்கோழி வளர்ப்பதற்கு 12 முதல் 20 ரூபாய் வரை செலவு ஆதாகவும் இதன் காரணமாக கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் பெரிதளவு பாதிக்கப்படுவதாக ஞூறப்படுகிறது.
இதனை மனதில் கொண்டு 2013 ஆம் ஆண்டு 2 ரூபாய் 50 காசு இருந்த ஒரு கிலோ கறிக்கோழி வளர்ப்புக்கான விலையை தமிழக அரசு கறிக்கோழி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோழி குஞ்சுகளை வழங்கும் நிறுவனத்தையும் அழைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி 6ரூபாய் 50 காசுகளாக உயர்த்தி விலை நிர்ணயம் செய்து வழங்கியது.
அதேபோல் தற்போதும் தமிழக அரசு கறிகோழிக்குஞ்சு வழங்கும் நிறுவனத்தையும், கறிக்கோழி பண்ணை உரிமையாளர்களையும் அழைத்து முத்தரவு பேச்சுவார்த்தை நடத்தி கிலோவிற்கு 20 ரூபாய் நிர்ணயம் செய்து கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை நிலை நாட்ட வேண்டும்.
இந்த கோரிக்கை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழி உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

admin
