500 ரூபாய் கலர் ஜிராக்ஸ்! திருப்பத்தூரில் நடமாட்டம்!

500 ரூபாய் கலர் ஜிராக்ஸ்! திருப்பத்தூரில் நடமாட்டம்!

ஆர்.ரமேஷ்,

  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சில பல பகுதிகளில் 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜிராக்ஸ் எடுத்துக் கொடுத்துப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெங்கலாபுரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்வதாக கூறப்படுகிறது.

  கிராம பகுதியான இங்கு ஏகப்பட்ட எண்ணெய் செக்குகள் உள்ளனவாம்.     

 அதுமட்டுமின்றி சொத்து பத்திரம் மற்றும் வழக்கு ஆவணங்களை ஜிராக்ஸ் எடுக்க கொடுத்தால் பலகடைகளில் எக்ஸ்ட்ராவாக ஒரு பிரிண்ட் போட்டு பதுக்கி வைத்துக் கொண்டு அதை பின்னர் படித்து பார்த்துவிட்டு அதற்கேற்றவாறு மிரட்டி பணம் பறிக்கிறார்களாம்.

 இதற்காக ஒரு குரூப் சேலம் போன்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறதாம். இதற்கு பல ஜிராக்ஸ் கடைக்காரர்கள் உடந்தை. அதில் திருப்பத்தூரும் அடக்கம்.

 ஆகவே பொதுமக்களே மேற்படி ஜிராக்ஸ் கடையில் 500 ரூபாய் நோட்டு கொடுத்தால் பார்த்து உஷாராக வாங்குங்கள். அதே போல் ஆவணங்களை ஜிராக்ஸ் எடுப்பதை கவனமாக கண்காணித்து வாங்கிச் செல்லுங்கள்.

 குறிப்பாக இ சேவை மையங்களில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் இது நடக்கிறதாம்.

ஓகே?