பத்திரிகையாளர் குடியிருப்பை திறந்து வைத்த நறுவீ G.V.சம்பத்! முக்கியஸ்தர்கள்பங்கேற்பு!

பத்திரிகையாளர் குடியிருப்பை திறந்து வைத்த நறுவீ G.V.சம்பத்! முக்கியஸ்தர்கள்பங்கேற்பு!

Ma.ba. Gajaraj,

  பத்திரிக்கையாளரின் புதிய குடியிருப்பை நறுவீ மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் தலைவர், முனைவர் G.V. சம்பத் அவர்கள் திறந்து வைத்தார்.

    வேலூர் மாவட்ட தலைநகர் வேலூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு பணியாற்றி கொண்டிருந்த நிருபர்களுக்கு அரசாங்கம் சார்பில் சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டது.

      வேலூர் அடுக்கம்பாறை மற்றும் அலமேலு மங்காபுரம் அடுத்த வசூர் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்ட மனைகளில் தற்போது பல செய்தியாளர்கள் வீடு கட்டும் பணியை துவங்கினர்.

      அந்த வகையில் வசூரில், தராசு மற்றும் குமுதம் இதழில் பணியாற்றிய கெஜராஜ் மற்றும் அவருக்கு அருகில் உள்ள வீட்டு மனையில் தினகரன் இதழின் எடிட்டர் திரு ரவீந்திரன் ஆகியோர் வீடு கட்டும் பணியை துவங்கி நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் கெஜராஜ் அவர்களின் இல்லத்தை நிறுவீ மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் தலைவர், முனைவர் G.V. சம்பத் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

  மேலும் G.V. சம்பத் அவர்கள் கெஜராஜ், அவரது மனைவி G.ஷீலா, மகனான வழக்கறிஞர் G.சுரேஷ் மேத்யூராஜ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

   முன்னதாக ஆயர்கள் சார்பில் துதி கன கிறிஸ்துவ பாடல்களுடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

வேலூர் தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயத்தின் முன்னாள் பொருளாளர் திரு சுந்தர், தற்போதைய பொருளாளர் ஆண்ட்ரூ ரத்தின சிங், மத்திய ஆலயத்தின் செயலாளர் திரு.ஜோசுவா, பொருளாளர் திரு. ஆரோன்,ஆயர்கள் அகஸ்டியன், சாமுவேல் கிறிஸ்டோபர் ஆகியோர் இதை முன் நின்று நடத்தினர்.

   நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நீதிபதி, பி.ஆர்.ஓ. நந்தகுமார், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, வழக்கறிஞர் தாஸ்,  வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பாபு, கவுன்சிலர் சோமு, சந்தியா மகப்பேறு மருத்துவமனையின் மேனேஜிங் டைரக்டர் திரு.பாபு,முன்னாள் ராணுவ வீரர் தண்டபாணி, ஏ.வி.எம். பட்டு சென்டர் நந்தகோபால், தொழிலதிபர் சி.கே. சிவாஜி, விசிக மாவட்ட செயலாளர் திரு.பிலிப், சத்துவாச்சாரி காந்திநகர் ரீகன், கசம் பண்ணை மேலாளர் ரூபஸ், ரியல் எஸ்டேட் அதிபர் பரத் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் வேலூர் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் சத்திய மூர்த்தி, சுதாகரன், தத்து புத்திரன், டி ராஜா, சையது பாஷா மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த மேத்யூ மார்சல், சூரிய நாராயணன், நிஷாந்த் மற்றும் சுஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அலமேலு மங்காபுரம் கோட்டி, பிரதீப், சிவ தாஸ், கோகுல், சுரேஷ், அருண், தீனா, போலீஸ் மதி, சயின் ஷா உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்தனர். 

    இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் ஜி. குலசேகரன், அ.மோகன், இந்து செந்தில், பாலாஜி, நியூஸ் 18 செல்வம், அசோக் குலசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிப்பு:-கடந்த 2007 ஆம் ஆண்டு வேலூரில் முதன்முதலாக "வேலூர் பிரஸ் கிளப்" என்கின்ற பெயரில் ஒரு ஒருங்கிணைப்பு அமைக்கப்பட்டது.

அதற்கு தினகரன் என்.ரவீந்திரன் தலைவராகவும்,  மக்கள் டி.வி. ஜி குலசேகரன் செயலாளராகவும்,  குமுதம் ரிப்போர்ட்டரில் பணியாற்றிக் கொண்டிருந்த ம.பா கெஜராஜ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

      கூடவே செயற்குழு உறுப்பினர்கள் உதவி மற்றும் துணை பதவிகள் அமைக்கப்பட்டது. 

இதன் மூலம் ஏற்பட்ட ஒருங்கிணைப்பு அன்றைய காலகட்டத்தில் 65 பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில்  வீட்டுமனை பட்டா பெறுவதற்கு வழி வகுத்தது.

   இதற்கு அன்றைய ஆட்சியர் திரு தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ் அவர்கள் பெரும் உதவி செய்தார் என்பதையும் மறக்க இயலாது.