த.வெ.க. ஒ.செ.வை காலில் விழவைத்தாரா மா.செ?! திருப்பத்தூரில் பரபரப்பு!
ஜி.குலசேகரன்,
ஜனநாயகன் படத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் என் போட்டோ எங்கேண்ணா. ஒன்றிய செயலாளர் கேள்விக்கு மாவட்ட செயலாளர் ஓட்டம்-லஞ்சம் வாங்க கூடாதுன்னு தளபதி சொல்றாரு ஆனா இவர் வெறும் லஞ்சம் மட்டும் தான் வாங்குறாரு வீட்டில் போட்டுள்ள ஆர்.ஓ. முதல் கார் வரை கட்சி நிர்வாகிகள் பணம் தான்!. கட்சி நிர்வாகிகள் கதறல்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, வெலக்கல்நத்தம் அடுத்த முனியூர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி மகன் முனிசாமி என்பவர் தமிழக வெற்றி கழகத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் பெற்று திமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். அப்போது பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டேன் என்று அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களிடம் தலா 80 லட்சம் பணம் வாங்கி கொண்டு வா மா மின்னல் என்பது போல பிரச்சாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு இன்னல்களுக்கிடையே தவெக ஆட்சி அமைத்த பின்பு திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி வசூல் வேட்டையை துணிந்து செய்ததாக கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஆர்.ஓ எந்திரம், சிறு பிள்ளைகளாக இருக்க கூடிய பிள்ளைகள் வீட்டில் கேம் விளையாட விலை உயர்ந்த லேப்டாப், நடந்து சென்று வந்த தந்தைக்கு புது எலக்ட்ரிக் பைக், பல்வேறு இடங்களில் பினாமி பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் சொத்துக்கள், மாவட்ட செயலாளர் முனுசாமி சென்று வர சொகுசு கார்கள், கட்சி அலுவலகம் உருவாக்க ஒன்றிய நகர நிர்வாகிகளிடம் கணிசமான தொகை என ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான அனைத்திற்கும் காட்சி நிர்வாகிகளை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்வதற்காக மாவட்ட செயலாளர் முனுசாமி வழக்கறிஞர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது வனத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பணம் மாவட்ட செயலாளர் பெற்றுள்ளார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.
அப்போது அருகிலிருந்த மாவட்ட செயலாளர் முனுசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று சொல்லுங்கள் என்று சொல்லி கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் குறளரசன் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் விரட்டி அடிக்கப்பட்டதாக வீடியோ வெளியானது. அதனைத் தொடர்ந்து ஒன்றிய செயலாளரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சக ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகிகளிடம் மாவட்ட செயலாளர் முனிசாமி கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த குரலரசன் ஏலகிரி மலை கோடை விழாவிற்கு வருகை தந்த வனத்துறை அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான ரஞ்சித் குமாரிடம் குறளரசன் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
என்னைப் பற்றி மந்திரியிடம் புகார் அளிக்கிறாயா? உன்னை இத்தோடு கட்சியிலிருந்து நீக்குகிறேன் என்று குறளரசனை வாடஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கம் செய்துள்ளார்.
அதோடு ஜனநாயகன் திரைப்படம் குறித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கும் பேனர்களில் ஒன்றிய செயலாளரின் புகைப்படம் போடக்கூடாது என்று ஒன்றிய நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மன உளைச்சல் அடைந்த குறளரசன் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே உள்ள திருப்பத்தூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்திற்கு சென்று மாவட்டச் செயலாளரிடம் பேனரில் எனது போட்டோவை ஏன் போடவில்லை என்று கேட்டுள்ளார்.
இதற்கு என்னிடம் பதில் இல்லை தலைமையிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் முனிசாமி கூறியதாக தெரிகிறது.
அதோடு ஒன்றிய நிர்வாகிகளிடமும் எனது போட்டோவை ஏன் போடவில்லை என்று குரல் அரசன் கேள்வி எழுப்பி மாவட்ட அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முனுசாமி இடமும் எனது போட்டோவை ஏன் அண்ணா போடவில்லை என்று கேட்டபோது உனக்கு நான் ரெண்டு மணி நேரம் விளக்கம் சொல்லிட்டேன்.
இதுக்கு மேல என்னால விளக்கம் சொல்ல முடியாது என அங்கிருந்து இருசக்கரம் வாகனத்தில் சென்றுவிட்டார்.
அப்போது சக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் ஐ காலில் விழ வைத்ததற்காக பதில் சொல்லுங்கள், கட்சி நிர்வாகிகளிடம் பணம் வாங்கியதற்காக பதில் சொல்லுங்கள் குரல் எழுப்பியதும் நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஒன்றிய செயலாளர் குறளரசன் தெரிவித்த போது தமிழக முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்கள் லஞ்சம் வாங்கக்கூடாது என்று கூறிவரும் நிலையில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் பதவி அளிப்பதற்காக பல பேரிடம் பல லட்சங்கள் வசூல் செய்து கோடி கணக்கில் கொள்ளையடித்துள்ளார் என்றும், நாயை விட கேவலமாக நடத்துவதாகவும், கட்சியில் கொஞ்சம் கூட மரியாதை இல்லை என்றும், நான்கு அல்லக்கைகளை கூட வைத்துக்கொண்டு அலப்பறை செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
அதோடு சக நிர்வாகிகள் நாங்கள் தளபதி விஜய் அண்ணாவிற்காக உயிரை கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் மாவட்ட செயலாளர்கள் என்ற போர்வையில் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இப்படி இருந்தால் எப்படி கட்சியை வளர்ப்பது என்ற ஆதங்கம் எங்களுக்குள் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் முனுசாமி மீது கட்சித் தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து உண்மை நிலவரம் அறிய தவெக மாவட்ட செயலாளர் முனிசாமியிடம் பேசினோம்.
சார் அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. தேர்தல் நேரத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்குவதற்காக அளித்த எதையுமே அவர் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை.
அதை குறித்து விளக்கம் கேட்டதில் இருந்து அவர் இப்படி என் மீது அபாண்டமான குற்றச்சாடுகளை அடுக்கி அவர் மீதான தவறுகளை திசை திருப்ப முயல்கிறார்.
வீடியோக்கள் கூட அவுங்களே எடுக்குறாங்க. அதுல கூட ஊராட்சி செயலாளர்களை அவர் ஏமாற்றியது வருகிறது. ஆகவே நான் எந்த தவறும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

admin
